அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணியின் பவுலரான இவரே நம்பர் 1 – பேர்ஸ்டோ புகழாரம்

Bairstow-2
- Advertisement -

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 75 டெஸ்ட் போட்டிகள், 89 ஒருநாள் போட்டிகள் மற்றும் 57 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் உலக அளவில் மிக அபாயகரமான ஒரு அதிரடி ஆட்டக்காரராக பார்க்கப்படுகிறார். அதுமட்டுமன்றி ஐபிஎல் தொடரிலும் சன்ரைஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Bairstow-1

- Advertisement -

துவக்க வீரராக தனது அதிரடியை வெளிப்படுத்தி உலகின் பல்வேறு பவுலர்களையும் தனது பேட்டிங்கில் அச்சுறுத்தி வரும் பேர்ஸ்டா தற்போது இந்திய அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தான் உலகின் தலைசிறந்த பவுலர் என்று பாராட்டியுள்ளார். பேர்ஸ்டோ இதுகுறித்து கூறுகையில் :

பும்ரா தான் உண்மையிலேயே உலகின் தலைசிறந்த பவுலர். நல்ல திறனுடைய ஒரு பந்து வீச்சாளர் என்னை பொறுத்தவரை உலக அளவில் சிறந்த பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான். ஏனெனில் ஐபிஎல், டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி விளையாடும் அவர் அனைத்து வகையிலும் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

Bumrah-1

அவரின் பந்துவீச்சு எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சற்று அச்சுறுத்தலாகவே இருக்கும். மேலும் எந்த ஒரு வடிவத்திலும் அவரது லைன் அன்ட் லென்த் துல்லியமாக இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் நிச்சயம் அவரை கணித்து ஆட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர். முதல் டெஸ்ட் போட்டியில் கூட மிகச் சிறப்பாக பும்ரா பந்துவீசியதாக பேர்ஸ்டோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement