இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது அந்த அணியின் நிர்வாகத்தை அதிருப்தியில் ஆழ்த்தியது. அதோடு கேப்டன் சஞ்சு சாம்சனை தாண்டி ரியான் பராக்கை அந்த அணி முன்னிலைப்படுத்துவதால் சஞ்சு சம்சனும் தனிப்பட்ட முறையில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சஞ்சு சாம்சன் வெளியேற காரணமே அவர்தான் : பத்ரிநாத் கருத்து
இதன் காரணமாக அடுத்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சஞ்சு சாம்சன் அணிமாற்றம் செய்ய இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. மேலும் தோனி இந்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்பதனால் சி.எஸ்.கே அணி அவரை டிரேடிங் முறையில் தங்களது அணிக்கு கொண்டுவர உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதனை உறுதி செய்யும் விதமாக சஞ்சு சாம்சனும் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தன்னை விடுவிக்குமாறு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக கூறப்பட்டது. இதன் காரணமாக நிச்சயம் சஞ்சு சாம்சன் மிகப்பெரிய தொகைக்கு ஏதாவது ஒரு அணியால் வாங்கப்படுவார் என்று தெரிகிறது.
அப்படி சஞ்சு சாம்சனை வாங்க சி.எஸ்.கே மற்றும் கொல்கத்தா அணிகள் ஆர்வம் காட்டும் என்று தெரிகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் பேசிய தமிழக முன்னாள் வீரரான பத்ரிநாத் கூறுகையில் :
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல் அணியிலிருந்து வெளியேற காரணமே ரியான் பராக் தான். ஏனெனில் அவர்கள் ரியான் பராக்கை கேப்டன் மெட்டீரியலாக பார்க்கிறார்கள். அவரையே முன்னிலைப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியில் காரணமாக தான் சஞ்சு சாம்சன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க : ஆஸி மாதிரி இங்கிலாந்தும் சச்சின் – ஆண்டர்சனை அவமதிக்கலாமா? பட்டோடி மெடலையும் கொடுக்கல.. கவாஸ்கர் சாடல்
அதனால் சஞ்சு சாம்சன் அவருக்கு கீழ் விளையாட தயங்குகிறார். அதன் காரணமாகவே அவர் வெளியேறவும் முடிவு செய்துள்ளார். சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணியை விட கே.கே.ஆர் அணிக்கு தான் பொருத்தமாக இருப்பார் என்றும் பத்ரிநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.



