அஷ்வின் மட்டுமில்ல அந்த 2 பேரையும் சேர்த்து தூக்குங்க.. அதுதான் சி.எஸ்.கே அணிக்கு நல்லது – பத்ரிநாத் ஆவேசம்

Badrinath
- Advertisement -

ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் முதல் 10 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளை பெற்று ஏற்கனவே இந்த தொடருக்கான ப்ளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த 2024-ஆம் ஆண்டு பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்ட சிஎஸ்கே இந்த ஆண்டும் பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்டது.

சி.எஸ்.கே அணியில் இன்னும் பல மாற்றங்கள் தேவை : சுப்ரமணியம் பத்ரிநாத்

இதன்மூலம் சி.எஸ்.கே அணி ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டு மோசமான நிலையை சந்தித்துள்ளது. இப்படி சிஎஸ்கே அணி மிகப்பெரிய சரிவை சந்திக்க மெகா ஏலத்தின் போது சரியான வீரர்களை வாங்காததே முக்கிய காரணம் என பல்வேறு கிரிக்கெட் விமர்சனங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் மற்ற அணிகள் எல்லாம் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்த வேளையில் சென்னை அணி மட்டும் சுமாராக செயல்படும் வீரர்களையே ஏலத்தில் எடுத்திருந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணி பலப்பட வேண்டுமெனில் அஸ்வினை மட்டுமில்லாமல் கூடுதலாக ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் ஆகியோரையும் சென்னை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என முன்னாள் சிஎஸ்கே வீரரான பத்ரிநாத் ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அஸ்வின் எனது நண்பர் தான் அவர் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ஆனாலும் சிஎஸ்கே அடுத்த ஆண்டு அவரை விடுவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோன்று ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர் ஆகியோரையும் அணியிலிருந்து வெளியேற்றினால் நல்ல தொகையுடன் சிஎஸ்கே அணி மினி ஏலத்திற்கு செல்லும்.

- Advertisement -

அப்படி மினி ஏலத்திற்கு செல்லும் போது பிக் பேஷ் அல்லது வேறு லீக் தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வாங்க முயற்சிக்கலாம். ஏனெனில் தற்போதைய சிஎஸ்கே அணியில் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்கள் தேவை என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை நிகழ்த்திய ஜாஸ் பட்லர் – விவரம் இதோ

அதே போன்று சாம் கரனை மூன்றாவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜாவை நான்காவது இடத்திலும் விளையாட வைத்து பேட்டிங் ஸ்பெஷலிஸ்ட்டான பிரேவிஸ்ஸை ஐந்தாவது வீரராக களமிறக்குவது ஏன்? என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு சி.எஸ்.கே அணி தற்போது மொத்தமாக குழப்பத்தில் இருக்கிறது இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் என பத்ரிநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement