சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது 38 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஏழாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் மாபெரும் சாதனை நிகழ்த்திய ஜாஸ் பட்லர் :
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களை ரன்களை குவித்தது.
பின்னர் 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 186 ரன்கள் மட்டுமே குவித்ததால் குஜராத் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணியின் சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கிய ஜாஸ் பாட்லர் 37 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 64 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
அவர் அடித்த இந்த 64 ரன்கள் மூலம் ஐபிஎல் போட்டிகளில் சூரியகுமார் யாதவின் மாபெரும் சாதனை ஒன்றிணையும் முறியடித்துள்ளார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஜாஸ் பட்லர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது பட்லர் 42 ரன்களை அடித்திருந்த வேளையில் ஐபிஎல் போட்டிகளில் 4000 ரன்கள் என்கிற மைல்கல்லை எட்டினார்.
அதிலும் குறிப்பாக இந்த 4000 ரன்களை அவர் 2677 பந்துகளில் எட்டியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 4000 ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் 4000 ரன்களை அடித்த அதிவேக வீரர்களின் பட்டியலில் கிரிஸ் கெயில் 2653 பந்துகளுடன் முதலிடத்திலும், ஏ.பி.டி வில்லியர்ஸ் 2658 பந்துகளுடன் இரண்டாவது இடத்திலும், சூரியகுமார் யாதவ் 2714 பந்துகளுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.
இதையும் படிங்க : இன்னும் எனக்குள் இருக்கும் அந்த நெருப்பு அணையவில்லை .. இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பேன் – ரஹானே பேட்டி
இந்நிலையில் நேற்று பட்லர் அடித்த இந்த 42 ரன்கள் மூலம் 2677 பந்துகளிலேயே 4000 ரன்களை குவித்ததால் சூரியகுமார் யாதவை பின்னுக்கு தள்ளி ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 4000 ரன்கள் குவித்த மூன்றாவது வீரராக தனது பெயரை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



