இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு இதுவே காரணம். எனக்கு ஹெல்ப் பண்ண யாருமில்லை – மனம்திறந்த பத்ரிநாத்

Badrinath
- Advertisement -

தமிழக வீரரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் தற்போது ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தன்னால் முடிந்த அளவிற்கு அனைத்தையும் முயற்சி செய்து பார்த்த பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

Badrinath

- Advertisement -

மேலும் இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்த போது இந்திய அணியில் சச்சின், டிராவிட், லட்சுமணன், யுவராஜ், சேவாக், காம்பீர் என அனைவரும் பேட்டிங்கில் நிரம்பி இருந்ததால் அப்போது நான் என்னுடைய பந்துவீச்சில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஏனெனில் நான் இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தபோது ஆல்ரவுண்டர் இடம் காலியாக இருந்தது. அதனால் நான் பந்துவீச்சில் கவனம் செலுத்தியிருந்தால் ஆறாவது, ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்தும் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராகவும் இருந்திருப்பேன். ஏனெனில் நான் உள்ளூர் போட்டிகளில் ஆப் ஸ்பின் நன்றாக பேசுவேன். மேலும் சில விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளேன்.

Badrinath

ஆனால் அப்போது எனக்கு இது குறித்து உதவ யாரும் இல்லை. எனவே நான் என்னுடைய பேட்டிங்கில் மட்டும் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வந்தேன். ஒரு வேளை ஆல்ரவுண்டராக இருந்திருந்தால் பின்வரிசையில் பேட்டிங் வாய்ப்பு கிடைப்பது மட்டுமின்றி அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்திருப்பேன். இருப்பினும் நான் அணியில் இருந்த வரை என்னுடைய சிறப்பான பங்களிப்பை செய்து உள்ளேன் என்று கூறினார்.

Badrinath

தமிழக அணிக்காக பத்தாயிரம் ரன்களுக்கு மேல் குவித்து உள்ள இவர் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரிலும் விளையாடியுள்ளார். மொத்தம் 95 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1441 ரன்களை குவித்துள்ளார். ஆனால் இவரது சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இவர் ஐபிஎல் தொடர்களில் இருந்து நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement