பாபர் அசாம் பக்கா செல்பிஷ் ஃப்ளேயர் எவ்ளோ சொல்லியும் கேட்கல – 2 பாக் ஜாம்பவான்கள் கடும் விமர்சனம்

Babar-Azam
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே பரிதாபமாக வெளியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான இந்தியாவிடம் கையில் வைத்திருந்த வெற்றியை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் நழுவ விட்டு அவமான தோல்வியை சந்தித்த அந்த அணி கத்துக்குட்டி ஜிம்பாப்பேவுக்கு எதிரான முக்கிய போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக அப்போட்டியில் வெறும் 131 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் அந்த அணி தோல்வியடைந்தது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் ரசிகர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

Babar Azam 1

- Advertisement -

அதுவும் ஏற்கனவே மிடில் ஆர்டர் பலவீனமாக தடுமாறுகிறது என்பதை தெரிந்தும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கேப்டன் பாபர் அசாம் மற்றும் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்ற பெயருடைய முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிக பந்துகளை எதிர்கொண்டு தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் அவுட்டாகி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்கள். இத்தனைக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு பொருந்தும் வகையில் அந்த அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தும் மோசமான பேட்டிங் காரணமாக 2 தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணிக்கு நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு ஆரம்பத்திலேயே 50% க்கும் கீழாக குறைந்து விட்டது.

செல்பிஷ் பாபர்:
முன்னதாக கடந்த ஒரு வருடமாகவே நிலவும் மிடில் ஆர்டர் பிரச்சனையை சரி செய்யும் வகையில் அணியின் நலனுக்காக கேப்டன் பாபர் அசாம் 3 அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பாகிஸ்தான் வட்டாரத்தில் நிலவி வருகின்றன. ஆனாலும் அதைக் கேட்காமல் கேப்டனாக தியாகம் செய்யும் மனப்பான்மை இல்லாமல் தன்னுடைய இடத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாபர் அசாம் சுயநலமாக செயல்படுவதாக அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்கள். இது பற்றி பிரபல தொலைக்காட்சியில் வக்கார் யூனிஸ் பேசியது பின்வருமாறு.

Waqar-Younis

“டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இருப்பதிலேயே ஓப்பனிங் இடம் தான் மிகவும் சுலபமானது. அந்த இடத்தில் நீங்கள் கடந்த 2 வருடங்களில் வேறு யாரையுமே களமிறங்க விடவில்லை. ஆனால் அங்கு ஏன் நீங்கள் புதிதாக எதையாவது முயற்சித்துப் பார்க்கக் கூடாது? என்பதை மிஸ்பாவுடன் ஏற்கனவே நான் விவாதித்துள்ளேன். இதற்கு முன் பந்து வீச்சில் நிறைய சோதனைகளை செய்த நீங்கள் பேட்டிங் துறையில் மிடில் ஆர்டரில் மட்டுமே சோதனை செய்தீர்கள்.

- Advertisement -

ஆனால் ஓப்பனிங் வீரர்கள் அப்படியே இருக்கிறார்கள். அவர்கள் 14 – 15 ஓவர்கள் வரை பேட்டிங் செய்கிறார்கள். சில நேரங்களில் கேப்டனாக அணியின் நலனுக்காக உங்களது இடத்தை மிடில் ஆர்டரில் தடுமாறும் ஹைதர் அலி போன்றவருக்கு கொடுக்க வேண்டும். அதன் காரணமாக நாம் தோற்று ஐசிசி தர வரிசையில் நம்பர் 1, 2 இடங்களை இழந்தால் அது பெரிய விஷயமல்ல. ஆனால் ரன்களை அடித்து வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.

wasimakram

இது பற்றி வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு. “இந்த பிரச்சனைகள் அனைத்தும் டாப் ஆர்டரில் தான் துவங்குகிறது. அங்கே உங்களது கேப்டன் இருக்கிறார். ஆனால் உங்களது கேப்டன் எப்போதும் அவருக்காக விளையாடி அவருடைய இடத்தை பாதுகாத்துக் கொள்கிறார். எப்போதும் ஒரு கேப்டன் ரன்களை குவித்து மற்ற பேட்ஸ்மேன்களை அவரது இடத்தில் விளையாட அனுமதித்து தன்னையே தியாகம் செய்ய தயாராக இருக்கிறார் என்பதை காட்ட வேண்டும். இதை பாபர் அசாம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் கேப்டன் மற்றும் தலைவராக இருப்பதற்கு வித்தியாசங்கள் உள்ளது”

இதையும் படிங்க : கேஎல் ராகுலின் ஆட்டமே இனிதான் ஆரம்பம் – விமர்சனங்களுக்கு பதிலடியுடன் முன்னாள் வீரர் பெரிய ஆதரவு

“கராச்சி கிங்ஸ் அணியில் நான் பாபருடன் இருந்துள்ளேன். அப்போது சில மோசமான தருணங்களில் நீங்கள் 3வது இடத்தில் களமிறங்கி மார்ட்டின் கப்டிலை தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைத்தேன். ஆனால் அதற்கு என்னிடம் மறுப்பு தெரிவித்த பாபர் அசாம் ஷர்ஜீலை 3வது இடத்தில் களமிறக்குவது பற்றி யோசிக்குமாறு கூறினார். இப்படி சிறிய விஷயங்களில் தான் உண்மையான கேப்டனுடைய பண்புகள் வெளிப்படும்” என்று கூறினார்.

Advertisement