பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்து மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருக்கும் சூழ்நிலையில் அந்நாட்டில் 2025 பிஎஸ்எல் தொடர் ஏப்ரல் 11ஆம் தேதி துவங்கியது. அதில் பாபர் அசாம் தலைமையிலான பெசாவர் ஜால்மி அணி தங்களது முதல் போட்டியில் ஏப்ரல் 12ஆம் தேதி குவிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை சந்தித்தது.
அதற்கு முந்தைய நாளில் பெசாவர் நகரில் பாபர் அசாம் தலைமையிலான தங்களுடைய அணிக்கு ஜால்மி நிர்வாகம் சார்பில் உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பாபர் அசாம் தலைமையிலான பிரசாவர் அணியினர் சுடச்சுட சுவையான பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர். அசைவ பிரியாணியை அவர்கள் உண்டு மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
மூக்கு முட்ட பிரியாணி:
அதைப் பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்கள் சுமாரான ஃபிட்னஸ் கடைப்பிடிப்பதாலேயே பாகிஸ்தான் இவ்வளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மூக்கு முட்ட பிரியாணி தின்றுவிட்டு சென்றால் வெற்றி பெற முடியுமா என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அந்த விமர்சனத்திற்கு மத்தியில் ராவல்பிண்டி நகரில் பெசாவர் அணி தங்களது முதல் போட்டியில் கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்டது.
அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கிளாடியேட்டர்ஸ் 20 ஓவரில் அபாரமாக பேட்டிங் செய்து 217 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அந்த அணிக்கு கேப்டன் சவுத் சாக்கில் 59, ஃபின் ஆலன் 53, ஹசன் நவாஸ் 41, ரிலீ ரோசவ் 21* (10), குசால் மெண்டிஸ் 35* (14) ரன்கள் விளாசி அசத்தினார்கள். அடுத்ததாக களமிறங்கிய பெசாவர் அணிக்கு முகமது அமீர் வீசிய முதல் ஓவரிலேயே பாபர் அசாம் சில்வர் டக் அவுட்டானார்.
பரிதாப தோல்வி:
அதன் காரணமாக பிரியாணி தின்றால் எப்படி ஃபிட்டாக நன்றாக விளையாட முடியும் என்று ரசிகர்கள் அவரை உடனே சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அவரைப் போலவே முகமது ஹாரிஸ் 13, டாம் கோலர் 0, மேக்ஸ் பிரைண்ட் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இதையும் படிங்க: மூளை நின்றுச்சா? தோனி விக்கெட் எடுத்த அவரை விட்டுட்டு.. அஸ்வினையும் ஒழுங்கா யூஸ் பண்ணல.. திவாரி விளாசல்
அதனால் சாய்ம் ஆயுப் 50, ஹுசைன் தலட் 35, மிட்சேல் ஓவன் 31 ரன்கள் எடுத்த போதிலும் ஃபினிஷிங் செய்யவில்லை. இறுதியில் 15.1 ஓவரில் பெஷாவரை 136 ரன்களுக்கு சுருட்டிய கிளாடியேட்டர் என்பது 2 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக துவக்கியது. அதிகபட்சமாக அப்ரார் அகமது 4, உஸ்மான் தாரிக் 2, முகமத் அமீர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். மறுபுறம் பிரியாணியுடன் களமிறங்கிய பாபர் அசாம் முதல் போட்டியிலேயே படுதோல்வியை சந்தித்தது.



