இன்னைக்கு இந்தியாவோட அந்த ரெக்கார்டை நாங்க முறியடிப்போம் – பாபர் அசாம் அதிரடி பேட்டி

Babar-Azam
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி இன்று அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த போட்டிக்காக ஏற்கனவே இரு அணி வீரர்களும் அகமதாபாத் வந்தடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்ட வேளையில் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்திற்கு முன்னதாக தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் பல்வேறு முக்கிய விடயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

நான் கடந்த காலத்தில் நடந்த முடிவுகளை பற்றி யோசிக்க போவதில்லை. இப்போது என்ன செய்ய வேண்டுமோ அதில் மட்டும் கவனமாக இருக்கிறேன். சாதனைகள் என்பது எப்போதுமே முறியடிக்க கூடிய ஒன்றுதான். அந்த வகையில் உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் இதுவரை தோல்வியை சந்தித்து வந்துள்ளோம். ஆனால் இந்தியாவின் அந்த சாதனை பயணம் இன்றோடு முடிவடையும் என்று நம்புகிறேன்.

- Advertisement -

ஏற்கனவே 2021-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை தோற்கடித்தோம். அதேபோல் இங்கும் அவர்களை தோற்கடித்து சாதனையை நிகழ்த்துவோம் என பாபர் அசாம் கூறினார். மேலும் தொடர்ந்து பேசி அவர் : எனக்கு போட்டியை விட அதற்குரிய டிக்கெட்டுகள் கேட்டு தான் நெருக்கடியாக இருக்கிறது. ஏனெனில் நிறைய பேர் என்னிடம் டிக்கெட் கேட்டு நச்சரிக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஹைதராபாத்தை விட சென்னை பிட்ச் சூப்பருங்க. காரணத்தை கூறிய – ஆட்டநாயகன் லாக்கி பெர்குசன்

அதிகளவு ரசிகர்கள் முன் விளையாடுவதை நெருக்கடியாக பார்க்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் பெரிய பெரிய மைதானங்களில் நிறைய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. ஐதராபாத்தில் எங்களுக்கு கிடைத்த ஆதரவு போன்றே இந்த மைதானத்திலும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து உற்சாகப்படுத்துவார்கள் என்று நம்புவதாக பாபர் அசாம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement