போனது போகட்டும் அதப்பத்தி யோசிக்கல. இம்முறை விடமாட்டோம் – இந்திய போட்டிக்கு முன்னர் பாபர் அசாம் பேட்டி

Azam

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற இருக்கிறது. எப்போது இந்தியா பாகிஸ்தான் அணி மோதிக் கொண்டாலும் அந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அந்த வகையில் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே பன்மடங்கு பெருகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ஆம் தேதி துவங்கிய இந்த உலகக் கோப்பை தொடரானது தற்போது சூப்பர் 12-சுற்றுகளை நோக்கி நகர்ந்துள்ளது.

pak 1

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் போது இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு தாங்கள் எவ்வாறு தயாராகி உள்ளோம் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். மேலும் துபாய் வருவதற்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானை அவர் சந்தித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் துபாய் வருவதற்கு முன்பாக இம்ரான் கானை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுக் கொண்டோம். 1992ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றபோது அப்போது அவர் இருந்த மனநிலை மற்றும் அவருடைய அனுபவங்களை எல்லாம் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். அவை அனைத்துமே நல்ல ஊக்கத்தை தந்தன. இருப்பினும் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த கால முடிவு குறித்து நாங்கள் சிந்திக்க விரும்பவில்லை. சாதனைகள் என்பதே தகர்க்கப்படத்தான்.

pak

இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு அணியாக நாங்கள் கோப்பையை வென்று சாதிக்க எதிர்நோக்கி உள்ளோம். எப்போதுமே தொடரின் முதல் போட்டி முக்கியமானது எனவே சிறப்பான துவக்கத்தை கண்டு அந்த உத்வேகத்துடன் தொடர்ந்து செயல்பட விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரில் 5 முறை இந்திய அணியை எதிர்த்து விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான இன்றைய போட்டியின் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில் : பாகிஸ்தான் அணி ஒரு வலுவான அணி அவர்களுக்கு எதிராக விளையாடும் போது ஒவ்வொரு முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார்கள் எனவே நாங்கள் சிறப்பாக விளையாட தயாராக இருக்கிறோம் என கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement