பாகிஸ்தான் அணிக்கெதிரான இன்றைய போட்டியின் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Jadeja
Advertisement

ஐசிசி நடத்தும் 7-வது உலகக் கோப்பைத் தொடரானது கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முக்கிய போட்டிகளான சூப்பர் 12 – சுற்று ஆட்டங்கள் நேற்று முதல் துவங்கின. நேற்றைய முதல் நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்ற வேளையில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அதில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.

jadeja 1

இரு நாட்டு அரசியல் விவகாரம் காரணமாக இரு தரப்பு தொடர்களில் விளையாடாமல் இருக்கும் இவ்விரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே கலந்து கொண்டு மோதி வருகின்றனர். இந்நிலையில் இம்முறையும் வழக்கம்போல ரசிகர்கள் மத்தியில் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பலத்த வரவேற்பு உள்ளது.

- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற தங்களது தீவிரத்தைக் காட்டும் என்பதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஏற்கனவே உலககோப்பை டி20 கிரிக்கெட்டில் 5 முறை பாகிஸ்தான் அணியை சந்தித்துள்ள இந்திய அணி ஒரு முறை கூட தோல்வி அடைந்தது இல்லை என்பதால் இம்முறையும் வெற்றியடைந்து தங்களது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும்.

pandya

அதேவேளையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தி அவர்களது முதல் வெற்றியை பதிவு செய்ய ஆவலாக காத்திருக்கும். இதன் காரணமாக இன்றைய போட்டியில் கடும் யுத்தம் நிலவும் என்றே கூறலாம். இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த உத்தேச பதிவை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : டி20 உ.கோ : பாகிஸ்தான் அணிக்கெதிராக அசத்தியமான சாதனையை கையில் வைத்திருக்கும் – விராட் கோலி

1) ரோகித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராத் கோலி, 4) சூர்யகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஜடேஜா, 8) அஷ்வின், 9) புவனேஷ்வர் குமார், 10) முகமது ஷமி, 11) ஜஸ்பிரித் பும்ரா இந்த பிளேயிங் லெவன் உத்தேசமாக கணிக்கப்பட்ட ஒன்றுதான் இதில் ஒரு சில மாற்றங்கள் இருந்தாலும் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement