கேப்டனாக விராட் கோலியை முந்தி சச்சின் படைக்காத இரட்டை உலகசாதனை படைத்த பாபர் அசாம்

Virat Kohli Babar Azam
Advertisement

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் தலைமையில் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இந்த தொடரில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. மே 8-ஆம் தேதியான நேற்று முல்தானில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கெய்ல் மேயர்ஸ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

wivspak 1

அதனால் 9/1 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய சம்ரா ப்ரூக்ஸ் உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சாய் ஹோப் நிதானமாக பேட்டிங் செய்து தனது அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். பவர் பிளே முடிந்தும் பாகிஸ்தான் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடி 30 ஓவர்கள் வரை நிதான பேட்டிங்கை கடைப்பிடித்து 2-வது விக்கெட்டுக்கு 152 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல நிலைமையை எட்ட வைத்தபோது 7 பவுண்டரியுடன் 70 (83) ரன்கள் எடுத்த ப்ரூக்ஸ் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஷாய் ஹோப் அசத்தல்:
அந்த சமயத்தில் வந்த கேப்டன் நிக்கலஸ் பூரன் 21 (16) ப்ரெண்டன் கிங் 4 (9) என பெரிய ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் 15 பவுண்டரி 1  சிக்சருடன் சிறப்பாக பேட்டிங் செய்த ஷாய் ஹோப் சதமடித்து 127 (134) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் ரோவ்மன் போவல் 32 (23) ரன்களும் ரோமாரியா செபார்ட் 25 (18) ரன்களும் அதிரடியாக எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 305/8 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 306 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு தொடக்க வீரர் பாகர் ஜமான் 11 (20) ரன்களில் ஆட்டமிழந்து சுமாரான தொடக்கத்தை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாம் வழக்கம் போல மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தார். அதில் இமாம்-உல்-ஹக் 65 (71) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த முகமது ரிஸ்வான் உடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் 3-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை எளிதாக்கினார்.

- Advertisement -

பாபர் அபாரம்:
அதில் முஹம்மது ரிஸ்வான் 59 ரன்களில் அவுட்டாக மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த பாபர் அசாம் 9 பவுண்டரியுடன் சதமடித்து 103 (107) ரன்களில் வெற்றியை உறுதிசெய்த ஆட்டமிழந்தார். இறுதியில் குஷ்டில் ஷா 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 41* (23) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 49.2 ஓவர்களில் 306/5 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 – 0* என்ற என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே அந்த அணி முன்னிலை பெற்ற அசத்தியுள்ளது.

இந்த வெற்றிக்கு 103 ரன்கள் குவித்து அட்டகாசமாக சேசிங் செய்த பாபர் அசாம் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் 41* (23) குவித்த இளம் வீரர் குஷ்தில் ஷா’வுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அந்த விருதை அவருக்கு வழங்குமாறு பாபர் அசாம் கேட்டுக் கொண்டதை அடுத்து குஷ்தில் ஷா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களின் நெஞ்சங்களைக் தொட்டுள்ளது. மேலும் கடைசியாக பங்கேற்ற 5 ஒருநாள் போட்டிகளில் 158, 57, 114, 105*, 103 என 4 சதங்கள் 1 அரைசதம் உட்பட முரட்டுத்தனமான பார்மில் ரன் மழை பொழிந்து வரும் பாபர் அசாம் விராட் கோலி போன்றவர்களை காட்டிலும் சமீப காலங்களில் தன்னை சிறந்த பேட்ஸ்மென் என்று நிரூபித்துள்ளார்.

- Advertisement -

இரட்டை சாதனை:
முன்னதாக கடைசி 3 போட்டிகளில் 114, 105*(ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), 103 (நேற்று) என ஹாட்ரிக் சதங்களை அடித்துள்ள அவர் ஏற்கனவே கடந்த 2016இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு தொடரில் 3 போட்டிகளிலும் முறையே 120, 123, 117 என தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்திருந்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 2 முறை 3 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சச்சின் டெண்டுல்கர் உட்பட யாரும் படைக்காத புதிய உலக சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : கேப்டனாக அடித்த லக் ! எம்எஸ் தோனி, விராட் கோலியை முந்தி புதிய சாதனை படைக்கும் ரிஷப் பண்ட்

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. பாபர் அசாம் : 13* இன்னிங்ஸ்
2. விராட் கோலி : 17 இன்னிங்ஸ்
3. ஏபி டீ வில்லியர்ஸ் : 18 இன்னிங்ஸ்

Advertisement