கேப்டனாக அடித்த லக் ! எம்எஸ் தோனி, விராட் கோலியை முந்தி புதிய சாதனை படைக்கும் ரிஷப் பண்ட்

Pant-4
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் களமிறங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 9-ஆம் தேதி முதல் துவங்குகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்ல இரு அணி வீரர்களும் ஆக்ரோசமாக போராடுவார்கள் என்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று நம்பலாம். இந்த தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

INDvsRSA toss

- Advertisement -

அதில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் ஆல்-ரவுண்டராகவும் கேப்டனாகவும் முதல் வருடத்திலேயே குஜராத்துக்கு கோப்பையை வென்று காட்டி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹர்திக் பாண்டியா, பெங்களூரு அணிக்காக பினிஷராக அட்டகாசமாக செயல்பட்ட தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மாஸ் கம் பேக் கொடுத்தனர். அதேபோல் இந்த ஐபிஎல் தொடரில் அசத்திய புவனேஸ்வர் குமார், சஹால், ஹர்ஷல் படேல் போன்ற சீனியர் நட்சத்திரங்களுடன் வேகத்தில் மிரட்டிய உம்ரான் மாலிக் விவேகத்தில் அசத்திய அர்ஷிதீப் சிங் ஆகிய இளம் வீரர்களும் முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளனர்.

ராகுல் விலகல், பண்ட் கேப்டன்:
விராட் கோலிக்கு பின் தற்போது புதிய முழுநேர கேப்டன் பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா ஏற்கனவே 34 வயதை கடந்து விட்டதால் அடுத்த தலைமுறை கேப்டனை தீர்மானிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பிசிசிஐ ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தலைமையில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 3 இளம் வீரர்கள் துணை கேப்டனாக வளர்க்கப்பட்டு அதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அதில் சிறந்தவரை அடுத்த கேப்டனாக தேர்வு செய்ய பிசிசிஐ முடிவெடுத்தது. அதன் காரணமாகவே நடைபெற்று முடிந்து ஐபிஎல் தொடரில் எதிர்பாராத வகையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக கோப்பையை வென்றாலும் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் முதல்முறையாக தற்காலிகக் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

Ind vs SA Temba Bavuma Pant

இருப்பினும் இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக டெல்லியில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரும் குல்தீப் யாதவும் துரதிஸ்டவசமாக காயத்தால் விலகினர். அந்த இக்கட்டான சூழ்நிலையில் வருங்கால கேப்டன்ஷிப் பற்றி எடுத்த முடிவில் கொஞ்சம் கூட மாறாத பிசிசிஐ பாண்டியாவை கேப்டனாக அறிவிக்காமல் மீண்டும் மற்றொரு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ரிஷப் பண்ட்டை கேப்டனாக அறிவித்தது. பாண்டியாவை துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது.

- Advertisement -

புதிய சாதனை:
இதை தொடர்ந்து புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் தலைமையில் இந்த டி20 தொடரில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா சந்திக்கிறது. கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் இந்தியாவின் துணை கேப்டனாக செயல்பட்ட இவர் ஐபிஎல் தொடரில் கடந்த சில வருடங்களாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழி நடத்தி வருகிறார். தற்போது 24 வருடம் 246 நாட்கள் வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதன் வாயிலாக “சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் இந்தியாவை வழிநடத்தும் 2-வது இந்திய கேப்டன்” என்ற சாதனையை எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோரை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

Pant

ஏற்கனவே தனது 23 வருடம் 197 நாட்களில் இந்தியாவை வழி நடத்திய முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச டி20 போட்டிகளில் மிக இளம் வயதில் கேப்டனாக செயல்பட்ட இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 3-வது இடத்தில் 2007-ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்று யாருமே எதிர்பாராத வகையில் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த எம்எஸ் தோனியும் (26 வயது) 4-வது இடத்தில் 2006இல் இந்தியா தனது அறிமுக டி20 போட்டியில் களமிறங்கிய போது கேப்டனாக செயல்பட்ட வீரேந்திர சேவாக் (28 வயது) உள்ளனர். அதேபோல் 2017 – 2021 வரை இந்தியாவை வழி நடத்திய விராட் கோலி (28 வயது) இப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

இப்படி திடீரென்று அதிர்ஷ்டமாக இந்தியாவுக்காக அவசரமாக கேப்டனாக பொறுப்பேற்றது பற்றி பண்ட் பேசியது பின்வருமாறு. ” இது ஒரு நல்ல உணர்வு என்றாலும் நல்ல சூழ்நிலையில் வரவில்லை. இருப்பினும் இதற்காக மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்தியாவை வழி நடத்தும் வாய்ப்பு கொடுத்த பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க : போனது போகட்டும், டி20 உ.கோ-யிலாவது இவருக்கு சான்ஸ் கொடுங்க – காரணத்துடன் ரவி சாஸ்திரி கோரிக்கை

அதை நான் அதிகம் பயன்படுத்த முயற்சிக்க உள்ளேன். எனக்கான ஒரு அடிப்படையை உருவாக்கி அதில் என் வாழ்க்கையை சிறப்பாக்கும் வகையில் முன்னேற விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement