
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 6ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு அமெரிக்காவின் டாலஸ் நகரில் 11வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அமெரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய முகமது ரிஸ்வான் 9 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த உஸ்மான் கான் 3 (3) ரன்களில் அவுட்டானார். போதாகுறைக்கு அதிரடியாக விளையாட முயற்சி பக்கார் ஜமான் 11 (7) ரன்களில் அவுட்டானதால் 26/3 என பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.
பாபர் அசாம் தடுமாற்றம்:
அதன் காரணமாக மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அதற்காக பவர் பிளே ஓவர்களில் கூட அதிரடியாக விளையாட முயற்சிக்காத அவர் ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து டெஸ்ட் போல மெதுவாக விளையாடினார். இருப்பினும் அடுத்ததாக வந்த சடாப் கான் அதிரடியாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை ஓரளவு காப்பாற்றினார்.
இருப்பினும் அரை சதத்தை தொடாமலேயே 40 (25) ரன்களில் அவுட்டான அவரைத் தொடர்ந்து வந்த அசாம் கான் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த பந்திலேயே மறுபுறம் கொஞ்சம் அதிரடியாக விளையாடி 44 (43) ரன்கள் எடுத்த பாபர் அசாம் கடைசி வரை ஆமை வேகத்திலேயே அவுட்டாகி சென்றார். இதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலி சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்தார்.
இதுவரை விராட் கோலி 4038* ரன்கள் எடுத்துள்ள நிலையில் பாபர் அசாம் 4067 ரன்கள் எடுத்து அவரை முந்தியுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த இப்திகார் அகமது 18 (14) ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக 23* (16) ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தான் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க: ஈகோ இல்லாத.. தோனி தான் ஆஸியை அணியில் அதை செய்ய தகுதியான ஒரே இந்தியர்.. ஹைடன் பாராட்டு
மறுபுறம் பவர் பிளே ஓவர்களில் பாகிஸ்தானுக்கு ஆட்டம் காட்டி ஓரளவு நன்றாகவே பந்து வீசிய அமெரிக்கா சார்பில் அதிகபட்சமாக நோஸ்துஷ் கெஞ்சிக் 3, சௌரப் நேத்ராவல்க்கர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதைத் தொடர்ந்து 160 என்ற கடினமான இலக்கை அமெரிக்க அணி துரத்தி வருகிறது. அதை கட்டுப்படுத்தி வெல்லும் முனைப்புடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.