சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மற்ற அணிகளை காட்டிலும் முடிசூடா அரசனாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை அசால்டாக 5 உலகக் கோப்பைகளை வென்றுள்ள அந்த அணி சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. அதனால் ஆஸ்திரேலியா ஒரு சிறந்த அணிக்கு எடுத்துக்காட்டாக எப்போதுமே திகழ்கிறது என்று சொல்லலாம்.
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போற்ற மற்ற இந்தியர்களை காட்டிலும் எம்.எஸ். தோனி மட்டுமே ஆஸ்திரேலியாவின் கேப்டனாக செயல்படக்கூடிய தகுதியை கொண்டுள்ளதாக மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார். கடந்த 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையில் 2010ஆம் ஆண்டு டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
ஆஸ்திரேலிய கேப்டன் தோனி:
அதைத் தொடர்ந்து 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்காக வென்று காட்டிய தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றார். அந்த வகையில் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்துள்ள தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் அமைந்தது. இந்நிலையில் அவரைப் பற்றி ஸ்போர்ட்ஸ் விகடன் இணையத்தில் ஹைடன் பேசியது பின்வருமாறு.
“ஆஸ்திரேலிய உடைமாற்றும் அறையில் தோனி எளிதாக உட்கார்ந்து அதை கேப்டன்ஷிப் செய்ய முடியும். ஏனெனில் அவர் யாரையும் விட பெரியவர் அல்ல என்று நம்புகிறார். பைகளை சேகரித்து பந்துகளை வீசும் அவர் மிகவும் எளிமையானவர். அவர் அணியில் கடினமாக உழைக்கிறார். அவர் எப்போதும் எம்எஸ் தோனியை (தன்னை) விளம்பரப்படுத்துபவர் அல்ல. தாம் எந்தளவுக்கு மகத்தானவன் அல்லது தாம் என்ன சாதித்தேன் என்பதை தோனி மற்றவர்களிடம் சொல்லி நீங்கள் பார்த்திருக்க முடியாது”
“அதனாலேயே எம்.எஸ். தோனி துருப்புச்சீட்டாக இருக்கிறார். நீங்கள் ஆஸ்திரேலியாவையும் 25 மில்லியன் மக்களையும் பாருங்கள். அவர்கள் எப்படி எங்களுக்கு எதிராக வென்றார்கள்? என்று கேட்பீர்கள். எம்எஸ் தோனி அனைத்து வீரர்களையும் ஒன்றிணைக்க ஒரு வழியை கண்டுபிடித்து வைத்துள்ளார். சுய விளம்பரத்திற்காக அல்லாமல் ஈகோவை பற்றி எதுவும் இல்லாத வகையில் அவர் அதை செய்கிறார்”
இதையும் படிங்க: பேட்டிங்ல மட்டுமல்ல.. இதுலயும் விராட் கோலி தான் நம்பர் 1.. பாகிஸ்தான் ஃபாலோ பண்ணனும்.. ஹபீஸ் வெளிப்படை
“சிறிய கிராமத்திலிருந்து வந்த அவர் இந்திய மக்கள் குறிப்பாக சென்னை மக்களின் இதயங்களில் இடம் பிடிக்கும் வழியை கண்டறிந்துள்ளார். எப்போதும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர கேப்டனாக தல இருப்பார். ஆனால் நாம் அனைவரும் சொல்வது போல் தோனி தம்மைப் பற்றிய எப்போதும் சொல்ல மாட்டார். அது தான் அவருடைய அழகாகும். அவர் எப்போதும் அணியை முன்னிலைப்படுத்துவதை அனைவரும் விரும்புகின்றனர்” என்று கூறினார்.