பேட்டிங்ல மட்டுமல்ல.. இதுலயும் விராட் கோலி தான் நம்பர் 1.. பாகிஸ்தான் ஃபாலோ பண்ணனும்.. ஹபீஸ் வெளிப்படை

Mohammad Hafeez
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 15 வருடங்களாக சர்வதேச அரங்கில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் சுமார் 50 என்ற பேட்டிங் சராசரியில் அசத்தி வருவதே அவருடைய தனித்துவமாகும்.

அதே போல ஐபிஎல் தொடரிலும் 8000 ரன்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்துள்ள அவர் இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார். அந்த வகையில் 35 வயதிலேயே ஜாம்பவானுக்கு நிகரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள அவர் பல இந்திய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். அதே போல நிறைய வெளிநாட்டவர்களும் அவரை பின்பற்றுகின்றனர்.

- Advertisement -

ஹபீஸ் பாராட்டு:
இந்நிலையில் விராட் கோலி தம்முடைய பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஃபிட்னஸ் அளவிலும் உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்வதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் பாராட்டியுள்ளார். அதை தற்போதைய பாகிஸ்தான் அணி பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளது பின்வருமாறு. “விராட் கோலி பற்றிய சிறிய விஷயத்தை நான் சொல்கிறேன்”

“தன்னுடைய பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஃபிட்னஸ் அளவிலும் அவர் தனக்கென்று ஒரு தரத்தை உருவாக்கியுள்ளார். அதனாலேயே அவருடைய மாற்றம் எளிதாக தெரிகிறது. நீங்கள் எவ்வளவு அழுத்தத்தை போட்டாலும் அவர் அதை உள்வாங்கி ஃபிட்டாக இருக்கிறார். 10 வருடங்களுக்கு பின்னால் திரும்பி விராட் கோலியை விட ஃபிட்டாக இருந்த வீரரின் பெயரை என்னிடம் சொல்லுங்கள் பார்ப்போம்”

- Advertisement -

“இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அவர் தான் ஃபிட்னஸ் காரணமாக நம்பர் ஒன் வீரராக இருக்கிறார். அவர் தன்னை மாற்றிக்கொண்ட விதத்தை வைத்து ஒருவர் தன்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 15 வருடங்களாக கிரிக்கெட்டில் விளையாடும் தமக்கு யோயோ டெஸ்ட் மதிப்பெண் 17க்கு பதில் 16 வந்தால் பிரச்சனையில்லை என்று விராட் கோலியும் சொல்வார்”

இதையும் படிங்க: நெஞ்சை தொட்ட கமின்ஸ்.. அத்துமீறிய ஓமன் வீரர்.. கோபத்தில் தன்னையே மறந்து வார்னர் செய்த செயல்

“என்னுடைய கொழுப்பின் அளவு 100லிருந்து 60 வரை குறைந்தாலும் கவலையில்லை நான் 70 சதங்கள் அடித்துள்ளேன் என்று சொல்வார். ஆனால் இப்போதும் இந்த விளையாட்டில் சிறப்பாக விளையாடுவதற்கு நான் ஒரு சிறந்த வீரராக இருந்து மரபை உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்வார். இந்த தரத்தின் காரணமாகவே சர்வதேச கிரிக்கெட்டிலும் ஒட்டுமொத்த உலகிலும் விராட் கோலி ஒரு நட்சத்திரமாக கருதப்படுகிறார்” என்று கூறினார்.

Advertisement