நெஞ்சை தொட்ட கமின்ஸ்.. அத்துமீறிய ஓமன் வீரர்.. கோபத்தில் தன்னையே மறந்து வார்னர் செய்த செயல்

AUS vs OMA
- Advertisement -

ஐசிசி டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் ஓமனை வீழ்த்தி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பார்படாஸ் நகரில் ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 56, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 67* ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஓமன் எதிர்பார்த்தது போலவே ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 125/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆயான் கான் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

- Advertisement -

2 முக்கிய நிகழ்வுகள்:
முன்னதாக அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக தேர்வு செய்யப்படாத நட்சத்திர வீரர் பட் கமின்ஸ் சக வீரர்களுக்காக கூல்டிரிங்ஸ் தூக்கியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 ஐசிசி கோப்பைகளை ஒரே வருடத்தில் கேப்டனாக அவர் ஆஸ்திரேலியாவின் வென்று சாதனை படைத்தார். அதே போல ஐபிஎல் 2024 தொடரில் அவருடைய தலைமையில் ஹைதராபாத் ஃபைனல் வரை சென்று மிரட்டியது.

இருப்பினும் ஆஸ்திரேலியாவின் டி20 கேப்டனாக தேர்வு செய்யப்படாத அவர் ஓமனுக்கு எதிரான இந்தப் போட்டியில் வாய்ப்பு பெறவில்லை. எனவே தங்களுடைய வீரர்களுக்கு கூல்ட்ரிங்க்ஸ் கொடுப்பதற்காக முதல் ஆளாக அவர் சென்றது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதை பார்க்கும் ரசிகர்கள் இப்படி பாகுபாடு இல்லாமல் அணிக்காக செயல்படுவதாலேயே ஆஸ்திரேலியா இந்தளவுக்கு வெற்றிகரமாக திகழ்வதாக தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

அதே போட்டியில் நட்சத்திர ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னரை ஓமன் வீரர் கலிமுல்லா அவுட்டாக்கினார். ஆனால் அப்போது ஏமாற்றத்துடன் சென்ற டேவிட் வார்னரை “காலால் எட்டி உதைத்து வெளியே போ” என்று சொல்லும் வகையில் கலிமுல்லா வெறித்தனமாக கொண்டாடியது ரசிகர்களை கடுப்பாக்கியது. ஏனெனில் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரராக போற்றப்படும் வார்னர் இப்போட்டியில் 51 ரன்கள் விளாசி ஓமன் வெற்றியை பறித்த பின்பே ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: மெல்போர்னில் விஸ்வரூபம்.. பாகிஸ்தானை அடக்கி இந்தியாவை அவமானத்திலிருந்து காப்பாற்றிய கிங் கோலி.. டி20 உ.கோ ரீவைண்ட்

ஆனால் கலிமுல்லாவை பெரும்பாலான ரசிகர்களுக்கு யாரென்றே தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவையின்றி மரியாதை குறைவாக இப்படி கொண்டாடுவது தேவையா? என்று அவரை ரசிகர்கள் விளாசி வருகின்றனர். மறுபுறம் அவர் அப்படி கொண்டாடியதால் விரக்தியுடன் கோபமடைந்த டேவிட் வார்னர் தன்னையே மறந்து ஓமன் அணியின் உடைமாற்றும் அறைக்கு சென்றார். அப்போது “அது நம்முடையது கிடையாது” என்று ஆஸ்திரேலிய வீரர்கள் சத்தமிட்டதால் சுதாரித்த வார்னர் படியிலிருந்து இறங்கி தங்களுடைய அறைக்கு சென்றார்.

Advertisement