வங்கதேசத்திடம் 16/3 என பாகிஸ்தான் தடுமாற்றம்.. 21 மாதமாக 0.. பாபர் அசாம் பரிதாப சாதனை

Babar Azam
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி ராவில்பிண்டி நகரில் துவங்கியது. நேற்று பெய்த மழையால் மிகவும் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே அப்துல்லா சபிக் இரண்டு ரன்னில் அவுட்டானார். அதை தொடர்ந்து வந்த கேப்டன் சான் மசூத் நிதானமாக விளையாட முயற்சித்த போதிலும் 6 ரன்களில் சோரிபுல் இஸ்லாம் வேகத்தில் நடையைக் கட்டினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபர் அசாம் அபாரமாக விளையாடி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சொந்த மண்ணில்:

ஏனென்றால் விராட் கோலியை விட சிறந்தவர் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் அவர் 2023 உலகக் கோப்பையில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதே போல 2024 டி20 உலகக் கோப்பையிலும் அரை சதம் கூட அடிக்காத அவர் பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வெளியேறுவதற்கு முக்கிய காரணமானார். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் களமிறங்கிய பாபர் அசாம் 2 பந்துகளை எதிர்கொண்டு சில்வர் டக் அவுட்டானார்.

இத்தனைக்கும் கிங் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் அவர் கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்திடம் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தாம் பிறந்து வளர்ந்த பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக பாபர் அசாம் டக் அவுட்டாகி பரிதாப சாதனை படைத்தார். மேலும் கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 2022 நம்பர் மாதம் அரை சதமடித்திருந்தார்.

- Advertisement -

21 மாதங்களில் 0:

அதன் பின் சுமார் 2 வருடங்களில் 21 மாதங்களில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் வெறும் 267 ரன்களை 20.53 என்ற மட்டுமே சராசரியில் எடுத்துள்ளார். அந்த வகையில் சுமாரான ஃபார்மில் இருக்கும் பாபர் அசாம் இப்போட்டியிலும் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 16/3 என பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே தடுமாற்றமான துவக்கத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: வார்னே 17 வயசா இருந்தாலும் இதைத்தான் செய்வேன்.. பீட்டர்சன் செய்த ஸ்லெட்ஜிங் பற்றி பியூஸ் சாவ்லா

அதனால் மற்றொரு துவக்க வீரர் சாய்ம் ஆயுப் மற்றும் சௌத் ஷாக்கீல் ஆகியோர் நிதானமாக விளையாடி பாகிஸ்தானை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர். அதன் காரணமாக சற்று முன் வரை அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ரன்கள் கடந்து பேட்டிங் செய்து வருகிறது. மறுபுறம் பாகிஸ்தானை 200 ரன்னுக்குள் சுருட்டும் முனைப்புடன் வங்கதேசம் பந்து வீசி வருகிறது.

Advertisement