உத்திரபிரதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாவ்லா கடந்த 2006 முதல் 2012 வரை இந்திய அணிக்காக விளையாடினார். லெக் ஸ்பின்னரான அவர் 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கமாக இருந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். இருப்பினும் அவர் 25 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடினார்.
அந்த வாய்ப்பில் தொடர்ச்சியாக அசத்தத் தவறியதால் அவரை அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி கழற்றி விட்டு ரவீந்திர ஜடேஜா, அஸ்வினுக்கு வாய்ப்பளித்தார். குறிப்பாக கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பியூஸ் சாவ்லா மிகவும் சுமாராக பந்து வீசினார். அதைப் பயன்படுத்தி இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் அவரை அடித்து நொறுக்கினார் என்றே சொல்லலாம்.
பீட்டர்சன் ஸ்லெட்சிங்:
குறிப்பாக மொஹாலியில் நடைபெற்ற 3வது போட்டியில் பியூஸ் சாவ்லா 9 ஓவரில் 45 ரன்கள் வாரி வழங்கினார். அவர் வீசிய 13 பந்துகளில் பீட்டர்சன் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சரை பறக்க விட்டார். அந்த வகையில் சுமாராக விளையாடியதால் 3 போட்டிகளுக்கு மேல் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இறுதியில் அந்தத் தொடரில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதுவே இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் கடைசியாக தோல்வியை சந்தித்த ஒரு டெஸ்ட் தொடராகும். இந்நிலையில் அப்போட்டியில் 17 வயதில் தம்மை அடித்த கெவின் பீட்டர்சன் “உங்களை மட்டுமல்ல ஷேன் வார்னே பந்து வீசினாலும் இப்படித்தான் அடிப்பேன்” என்று ஸ்லெட்ஜிங் செய்ததாக பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
17 வயதில் அடி:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த நேரத்தில் இந்திய அணியில் அனைவருமே எனக்கு ஆதரவு கொடுத்தனர். அவ்வாறு சீனியர்களிடமிருந்து ஒரு இளம் வீரருக்கு ஆதரவு கிடைப்பது மிகவும் முக்கியம். என்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் கெவின் பீட்டர்சன் மைதானத்தின் பல்வேறு திசைகளில் என்னை அடித்தார். அதன் பின் “ஷேன் வார்னே அல்லது 17 வயது குழந்தையாக இருந்தாலும் இப்படித்தான் அடிப்பேன்” என்று அவர் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார்”
இதையும் படிங்க: 16 ஓட்டு.. 35 வயது.. ஐசிசி வாரியத்தில் உலக சாதனை படைக்கப் போகும் ஜெய் ஷா.. வெளியான தகவல்
“அது சர்வதேச கிரிக்கெட்டுக்கு என்னை வரவேற்ற தருணம் போல் அமைந்தது. உள்ளூர் கிரிக்கெட்டில் 2வது போட்டியிலேயே நான் கிட்டத்தட்ட 5 விக்கெட்டுகளை எடுத்தேன். அதனால் அது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்பு தான் சர்வதேச போட்டிகள் எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தேன்” என்று கூறினார்.



