2023 உ.கோ’யில் பங்கேற்க இந்தியா செல்வீர்களா? செய்தியாளரின் கேள்விக்கு பாபர் அசாம் கொடுத்த நேரடி பதில் இதோ

IND vs PAK Babar Azam Rohit Sharma
Advertisement

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. இருப்பினும் எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசியக் கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Jay Shah IND vs PAk

ஆனால் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் நீங்கள் தங்களிடம் கேட்காமல் இப்படி பேசியது ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்களது நாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்க வரவில்லை என்றால் வரும் அக்டோபர் மாதம் உங்களது நாட்டில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பையை நாங்களும் புறக்கணிப்போம் என்று நேரடியாக அறிவித்தது. அதனால் கடந்த சில மாதங்களாகவே இரு நாடுகளுக்குமிடையே இது பற்றிய விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில் ஆசிய கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை பங்கு போடும் நாடுகளாக பாகிஸ்தான், இலங்கை இருக்கின்றன.

- Advertisement -

பாபர் அசாம் பதில்:
ஆனால் ஆசிய கவுன்சிலுக்கு நிதியளிக்கும் நாடாக இருக்கும் இந்தியா சர்வதேச கிரிக்கெட்டை நடத்தும் ஐசிசிக்கே அதிக வருமானத்தை சம்பாதித்துக் கொடுக்கும் நாடகவும் இருந்து வருகிறது. அதனால் என்ன தான் பாகிஸ்தான் பேசினாலும் இந்த விவகாரத்தின் இறுதியில் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷா எடுக்கும் முடிவே இறுதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அத்துடன் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை புறக்கணித்தால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு பணம் பாகிஸ்தானுக்கு கிடைக்காது.

Babar Azam Rohit Sharma IND vs PAK

அதனால் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கக் கூடாது என்று முன்னாள் வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ஷாஹித் அப்ரிடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பதற்கான சூழல் அதிகரித்துள்ள நிலையில் இது பற்றி பிஎஸ்எல் தொடரில் கேப்டன் பாபர் அசாமிடம் நேரடியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்தியாவில் விளையாடுவோம் என்று நேரடியாக சொல்லாமல் அந்த உலகக் கோப்பையில் முழு கவனத்தை செலுத்த உள்ளதாக பாபர் அசாம் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் இப்போது முதலே கவனம் செலுத்த துவங்கியுள்ள நாங்கள் அந்த தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்க உள்ளோம். குறிப்பாக நானும் முகமது ரிஸ்வானும் டாப் ஆர்டரில் நல்ல ஜோடியாக இருப்பதால் பெரிய ரன்களை குவிக்க முயற்சிக்க உள்ளோம். ஆனால் அதற்காக எங்களால் அனைத்து இன்னிங்ஸ்களிலும் பெரிய ரன்களை அடிக்க முடியாது. அதனால் தான் பொதுவாக ஒரு அணி ஓரிரு வீரர்களை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என்று சொல்வார்கள்”

Babar Azam Rohit Sharma IND vs PAK

“இருப்பினும் களத்தில் பாகிஸ்தான் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு போட்டியை வென்று கொடுக்கும் பசியுடன் எங்களது அணியிலும் நிறைய வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்று கூறினார். இதனால் பாகிஸ்தானில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்போம் என்று பாபர் அசாம் சொல்லாமல் சொல்லியுள்ளார் என்றே சொல்லலாம். இருப்பினும் திட்டமிட்டது போல பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா ஆசிய கோப்பையில் பங்கேற்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:என்னதான் நாங்க ஜெயிச்சிருந்தாலும் அவரோட பேட்டிங் உண்மையிலே சூப்பரா இருந்துச்சி – மனதார பாராட்டிய ஸ்டீவ் ஸ்மித்

அத்துடன் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரில் சமீபத்தில் கராச்சியில் நடைபெற்ற ஒரு போட்டியின் அருகில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடந்ததால் அத்தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுவதற்கு ஆசிய கவுன்சில் கடைசி நேரத்தில் முடிவெடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது. அதனால் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது என்ற முடிவில் இந்தியா வெற்றி கண்டுள்ளது என்று இப்போதே உறுதியாக சொல்லலாம். மறுபுறம் 2012க்குப்பின் 10 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு வந்து பாகிஸ்தான் விளையாடப் போவதும் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement