என்னதான் நாங்க ஜெயிச்சிருந்தாலும் அவரோட பேட்டிங் உண்மையிலே சூப்பரா இருந்துச்சி – மனதார பாராட்டிய ஸ்டீவ் ஸ்மித்

Steve-Smith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த வேளையில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இந்தூர் மைதானத்தில் தொடங்கியது.

Pujara

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 109 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 197 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 88 ரன்கள் பின்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 163 ரன்களுக்கு ஆலவுட்டானது.

இதன் காரணமாக 76 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 78 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கொண்டு வந்துள்ளது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

Pujara-1

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னணி வீரரான புஜாரா குறித்து அவர் பேசியிருந்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கான பல காரணங்களை கூறிய ஸ்மித் அதன்பிறகு :

- Advertisement -

இதையும் படிங்க : IND vs AUS : பொறுத்தது போதும், ஒய்ட் பால் மாதிரி டெஸ்ட் அணியிலும் அந்த சீனியர்களை கழற்றி விடுங்க – டிகே அதிரடி பேட்டி

இந்திய வீரரான புஜாரா இந்த இரண்டாவது இன்னிங்சில் அற்புதமாக விளையாடினார் என்றும் அவர் விளையாடும் வரை எங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் புஜாரா 142 பந்துகளை சந்தித்து ஐந்து பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement