சைக்கிள் வேகத்தில் ஆடிட்டு கோபம் வேற.. ஸ்மித்தால் வெறுப்பான பாபர் அசாம்.. ரசிகர்கள் விமர்சனம்

Babar Azam 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் டி20 கிரிக்கெட் தொடரில் ஜனவரி 16ஆம் தேதி சிட்னியில் 37வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. அதில் தண்டர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த சிக்ஸர்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் சதமடித்து 110* (65) ரன்களை குவித்தார். அடுத்து விளையாடிய சிக்ஸர்ஸ் அணி 17.2 ஓவரில் 191/5 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் சதத்தை அடித்து 100 (42), பாபர் அசாம் 47 (39) ரன்கள் விளாசி வெற்றியில் பங்காற்றினார்கள்.

- Advertisement -

சைக்கிள் வேகத்தில்:

முன்னதாக இத்தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் முதல் முறையாக விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் அவர் டெஸ்ட் போல மெதுவாக விளையாடி சிக்ஸர்ஸ் அணிக்கு பின்னடைவையே கொடுத்தார். அதே போல இப்போட்டியில் ஒருபுறம் ஸ்டீவ் ஸ்மித் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிரடியாக விளையாடினார்.

ஆனால் மறுபுறம் சைக்கிள் வேகத்தில் பாபர் அசாம் நிதானமாக விளையாடினார். அந்த சூழ்நிலையில் 11வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஸ்மித் சிங்கிள் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் அதை எடுக்கவில்லை. குறிப்பாக ஒவ்வொரு ஓவரிலும் ஆரம்பக்கட்ட பந்துகளில் பாபர் அசாம் அதிரடியாக விளையாட தடுமாறினார்.

- Advertisement -

குறைவில்லாத கோபம்:

அதனால் 11வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்காத அவர் பாபர் அசாமுக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்கவில்லை. அதன் காரணமாக “ஏன்?” என்ற வகையில் பாபர் அசாம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மறுபுறம் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் நேரத்தில் விளையாடிய ஸ்மித் 12வது ஓவரில் ரியன் ஹாட்லிக்கு எதிராக 6, 6, 6, 6, 4, 2 என 30 ரன்களை வெளுத்து வாங்கி தம்முடைய முடிவை சரியென்று நிரூபித்தார்.

ஆனால் அதற்காக மகிழ்ச்சியடையாத பாபர் அசாம் வெறுப்பானதாக தெரிகிறது. அதன் காரணமாக அடுத்த ஓவரிலேயே 47 (39) ரன்களை 120.51 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்த அவர் கிளீன் போல்ட்டாகி அவுட்டானார். அந்தக் கோபத்தில் மைதானத்தை விட்டு வெளியேறும் முன் பவுண்டரி எல்லையிலிருந்த குஷனை அவர் தன்னுடைய பேட்டால் அடித்து விட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: இன்னும் 26 ரன்கள் மட்டுமே தேவை.. ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் – நிகழ்த்தப்போகும் சாதனை

அதைப் பார்க்கும் டி20 போட்டியில் ரசிகர்கள் சைக்கிள் வேகத்தில் விளையாடி விட்டு கோபத்திற்கு மட்டும் குறைச்சல் இல்லை என்று அவரை சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். மறுபுறம் தொடர்ந்து பட்டாசாக விளையாடிய ஸ்மித் 41 பந்தில் பிக்பேஷ் வரலாற்றில் 2வது வேகமான சதத்தை அடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement