உங்கள நம்பி சொன்னதுக்கு இப்படியா பண்ணுவீங்க.. எப்படியாச்சும் பாகிஸ்தானை காப்பாத்துங்க.. பாபருக்கு கம்பீர் அட்வைஸ்

gautam gambhir 6
Advertisement

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனால் அதன் பின் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக 191 ரன்களுக்கு சுருண்ட அந்த அணி உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக அவமான தோல்வியை சந்தித்தது.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 282 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்தது. அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் நன்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.

- Advertisement -

கம்பீர் அறிவுரை:
ஏனெனில் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் இந்த தொடரில் 5, 10, 50, 18, 74 என எதிர்பார்ப்பு நிகராக பெரிய ரன்களை எடுக்காமல் தடுமாற்றமாக செயல்பட்டு வருவது காரணமாக அமைந்து வருகிறது. முன்னதாக ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாம் இந்தியாவின் ரோகித் சர்மா, கில், விராட் கோலி விட வித்தியாசமான கிளாஸை கொண்டிருப்பதால் இந்த உலகக் கோப்பையில் குறைந்தது 2 – 3 மதங்கள் அடிப்பார் என்று கௌதம் கம்பீர் ஆரம்பத்திலேயே பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் இப்போதும் உங்களால் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானை செமி ஃபைனல் சுற்றுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்று பாபர் அசாம் மீது கௌதம் கம்பீர் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய பின்வருமாறு. “பாபர் அசாமும் மொத்த பாகிஸ்தான் அணியும் அழுத்தத்தின் கீழ் இருக்கிறது”

- Advertisement -

“இந்த நேரத்தில் பாபர் அசாம் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அவரிடம் பெயர், கிளாஸ் மற்றும் திறமை இருக்கிறது. சொல்லப்போனால் இந்த உலகக் கோப்பையில் டாப் 5 வீரர்களில் பாபர் அசாம் ஒருவராக இருப்பார் என்று நான் ஆரம்பத்தில் தேர்வு செய்திருந்தேன். குறிப்பாக அவர் இந்திய மைதானங்களில் 3 – 4 சதங்கள் அடிப்பார் என்று சொல்லியிருந்தேன். இப்போதும் அவரிடம் அந்த திறமை இருக்கிறது. ஆனால் நீங்கள் 50, 60, 70 ரன்கள் மெதுவாக அடித்தால் உபயோகமில்லை”

இதையும் படிங்க: மும்பையில் எப்டி வாழ்றீங்க.. காற்றை திங்குற மாதிரி இருக்கு.. இந்தியா பற்றி ஜோ ரூட் புதிய விமர்சனம்

“ஏனெனில் உங்களுடைய அணி தோற்கிறது. இந்தியாவுக்கு எதிராக நல்ல துவக்கத்தை பெற்ற அவர் தொடர்ந்து மெதுவாக விளையாடி இதர பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை உண்டாக்கினார். எனவே உங்களுடைய அணி ஆக்ரோஷமாக செயல்பட வேண்டுமெனில் நீங்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். கேப்டனாகவும் கேப்டனாகவும் வித்தியாசமாக சிந்தித்து பாகிஸ்தானை செமி ஃபைனல் அழைத்துச் செல்ல வேண்டும்” என்று கூறினார்.

Advertisement