லண்டனில் தற்போது காமன்வெல்த் போட்டிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்களும் தங்களது நாட்டிற்காக பதக்கங்களை வென்று கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே இந்தியா இதுவரை 9 தங்கம் உட்பட 24 பதக்கங்களை வென்று ஐந்தாவது இடத்தில் உள்ள இவ்வேளையில் நமது அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு தங்கம் 2 வெள்ளி 2 விண்கலம் என 5 பதக்கங்களுடன் உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் எப்போது எங்கு சந்தித்தாலும் அங்கு யார் பலமானவர்கள் என்பதை நிரூபிக்க கடும் போட்டி நிலவும் அந்த வகையில் தற்போது காமன்வெல்த் போட்டிகளிலும் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களது நாட்டுக்காக பதக்கங்களை வாங்கி தர கடினமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சார்பாக தற்போது காமன்வெல்த் போட்டிகளில் முதல் தங்கத்தை பாகிஸ்தான் வீரர் தஸ்தாகிர் பட் என்பவர் பெற்று தந்துள்ளார்.
105 கிலோ எடைப்பிரிவில் பளு தூக்கும் வீரராக இருக்கும் இவர் 405 கிலோவை தூக்கி அந்த போட்டியில் முதல் இடத்தை வென்று தங்கம் வென்றுள்ளார். இந்நிலையில் தங்கம் வென்ற அவரை பாராட்டும் விதமாக தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் தனது சொந்த பணத்திலிருந்து 20 லட்சம் ரூபாயை அவருக்கு ஊக்கத்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அதோடு இனிவரும் தொடர்களிலும் அவர் பாகிஸ்தான் நாட்டிற்காக சாதிக்க நான் அளிக்கும் சிறு உதவி என்று அவர் இந்த தொகையை வழங்கியுள்ளார்.
Babar Azam Winning Hearts.#BabarAzam𓃵 #CommonwealthGames2022 #CommonwealthGames #GoldMedal #Pakistan pic.twitter.com/dxFPwcSa9f
— The Pakistan Frontier (@PakFrontier) August 4, 2022
பாகிஸ்தான் கேப்டனான பாபர் அசாமின் இந்த பெரிய மனதினை பாராட்டி ரசிகர்களும் அவரை இணையத்தில் வாழ்த்தி வருகின்றனர். அதாவது கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருக்கும் இவர் தன் நாட்டில் எந்த வீரர் முன்னேற வேண்டும் என்று நினைத்தாலும் திறமை உள்ளவர்களை ஆதரிக்க வேண்டும் என்று அவரை ஊக்கப்படுத்தி அவருக்கு நிதி உதவி வழங்கியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பளு தூக்கும் வீரரான தஸ்தாகிர் பட் : தான் வென்ற இந்த பதக்கம் குறித்து பேசுகையில் : என்னுடைய இந்த பதக்கம் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் எனக்கு கொடுத்த ஆதரவின் காரணமாக கிடைத்தது. அவர்களது ஆதரவு இல்லாமல் நான் இதனை சாதித்து இருக்க முடியாது. நான் வென்ற இந்த தங்க மடலை எனது தந்தைக்காக அர்ப்பணிக்கிறேன்.
இதையும் படிங்க : கேப்டன்ஷிப் விஷயத்தில் கோலி தான் அந்த முடிவை எடுத்தார், நாங்க என்ன செய்ய முடியும் – பிசிசிஐ நிர்வாகி கருத்து
கடந்த 12 ஆண்டுகளாக நான் கடினமாக உழைத்து இந்த நிலையை அடைந்துள்ளேன். இதுவரை நான் வாழ்வில் கடந்து வந்த பாதைக்கு உதவிய எனது தந்தைக்காக இந்த தங்க மடலை அர்ப்பணிப்பதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.