பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 12-ம் தேதியான இன்று லாகூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
பாபர் அசாம் நிகழ்த்திய சாதனை :
அதன்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இன்றைய முதல்நாள் ஆட்ட நேரத்தில் தற்போது வரை 74 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை எழுந்து 253 ரன்களை குவித்துள்ளது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் இமாம் உல் ஹக் 93 ரன்களையும், கேப்டன் ஷான் மசூத் 76 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி சார்பாக நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடிய அந்த அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாம் 48 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரிகளுடன் 23 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது அவர் முதல் 3 ரன்களை கடந்த வேளையில் ஒரு மாபெரும் சாதனை ஒன்றினை ஆசிய பேட்ஸ்மேனாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இந்த போட்டியில் அவர் முதல் பவுண்டரி அடித்தபோது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 3000 ரன்களை அவர் குவித்தார். இதன்மூலம் ஆசிய பேட்ஸ்மேனாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய கேப்டன் சுப்மன் கில் 2826 ரன்கள் எடுத்திருக்கும் வேளையில் தற்போது முதல் ஆசிய பேட்ஸ்மேனாக பாபர் அசாம் 3000 ரன்களை பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கஷ்டமான வேலையை மெச்சுரிட்டியோட செய்யும் கில்.. இந்தியாவின் வருங்காலத்தை அமைக்கிறார்.. கும்ப்ளே பேட்டி
ஏற்கனவே தனது மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக பாகிஸ்தான் அணியின் டி20 போட்டிகளுக்கான வாய்ப்பினை இழந்த பாபர் அசாம் தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



