கஷ்டமான வேலையை மெச்சுரிட்டியோட செய்யும் கில்.. இந்தியாவின் வருங்காலத்தை அமைக்கிறார்.. கும்ப்ளே பேட்டி

Anil Kumble
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் அவர் வெளிநாட்டுப் போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் வெளிநாட்டுப் போட்டிகளில் இருப்பதற்கே பொருத்தமற்ற அவரை கேப்டனாக நியமிக்கலாமா? என்ற விமர்சனங்கள் எழுந்தன.

அந்த சூழ்நிலையில் இங்கிலாந்தில் அபாரமாக விளையாடிய கில் 754 ரன்கள் விளாசி 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரில் முதல் போட்டியில் நல்ல ரன்கள் குவித்த அவர் 2வது போட்டியில் சதத்தை விளாசி 129* ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

கடினமான கேப்டன்ஷிப் வேலை:

அத்துடன் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக (5) டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் அவர் சமன் செய்தார். இந்நிலையில் இந்திய அணியை கேப்டனாக தலைமைத் தாங்குவது எளிதான வேலை கிடையாது என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ளார். அந்த வேலையை சுப்மன் கில் இளம் வயதிலேயே மிகவும் பொறுமை மற்றும் முயற்சியுடன் கையாளுவதாக அவர் பாராட்டியுள்ளார்.

எனவே சுப்மன் கில் கேப்டன்ஷிப் இந்திய அணிக்கு நல்ல வருங்காலத்தை அமைக்கும் என்று தெரிவிக்கும் கும்ப்ளே இது பற்றி ஜியோஹாட்ஸ்டார் சேனலில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவை தலைமைத் தாங்குவது எப்போதும் எளிது கிடையாது. அந்த வேலையில் களத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் மட்டும் கடினமாக இருக்காது. களத்திற்கு வெளியே நிறைய பொறுப்பான செயல்களையும் நன்றாக கையாள வேண்டும்”

- Advertisement -

முதிர்ச்சியுடன் கில்:

“அதை சுப்மன் கில் நன்றாக செய்து வருகிறார். கேப்டனாக பொறுப்பேற்றது முதல் ஒரு பேட்ஸ்மேனாக அவர் மிகவும் சிறந்த அமைதியைக் காண்பிக்கிறார். அந்த வெளிப்படுத்தலில் 2வது வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் எந்த வித்தியாசமும் இல்லை. சூழ்நிலையை கச்சிதமாகப் படித்த அவர் ஸ்பின்னர்களை தேவைப்படும் போது அட்டாக் செய்து ஸ்கோரிங் ரேட்டை பராமரித்தார்”

இதையும் படிங்க: வெ.இ அணியை அடித்து நொறுக்காத தம்பி.. லாரா வைத்த கோரிக்கை.. ஜெய்ஸ்வால் பணிவான பதில் பேட்டி

“ஒரு இளம் கேப்டன் ரன்கள் அடிப்பது முக்கியம். அது இந்திய அணியின் உடைமாற்றும் அறையில் மரியாதையைப் பெற்றுக் கொடுக்கும். அது கேப்டன்ஷிப் பொறுப்பில் பலத்தையும் முத்திரையையும் கட்டமைக்கும். பொதுவாக நிறைய வருடங்கள் விளையாடிய வீரர்கள் தங்களை நிரூபித்த பின் கேப்டனாக பொறுப்பேற்பார்கள். ஆனால் சுப்மன் கில் முன்னதாகவே கேப்டனாக பொறுப்பேற்று இந்தளவுக்கு அசத்துகிறார். இது அவருடைய சிறந்த முதிர்ச்சி மற்றும் இந்தியாவின் வருங்காலத்தைப் பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.

Advertisement