வெ.இ அணியை அடித்து நொறுக்காத தம்பி.. லாரா வைத்த கோரிக்கை.. ஜெய்ஸ்வால் பணிவான பதில் பேட்டி

Yashasvi Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 10ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 518/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 175 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவருடன் கேப்டன் சுப்மன் கில் சதத்தை அடித்து 129*, சாய் சுதர்சன் 87 ரன்கள் குவித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கடந்தப் போட்டியை விட ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப் போராடியது.

- Advertisement -

லாராவின் கோரிக்கை:

இருப்பினும் சீரான இடைவெளிகளில் விக்கட்டைகளை இழந்த அந்த அணி 248 ரன்களுக்கு ஃபாலோ ஆன் பெற்றது. அதிகபட்சமாக அலிக் அதனேஷ் 41, ஷாய் ஹோப் 36 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2023ஆம் ஆண்டு அறிமுகமான ஜெயஸ்வால் தனது முதல் போட்டியிலேயே 171 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

அப்போதிலிருந்து சீராக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் 3000+ ரன்களை கடந்து அசத்தி வருகிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை மோசமாக அடித்து நொறுக்காதே தம்பி என்ற வகையில் ஜெய்ஸ்வாலுக்கு ஜாம்பவான் பிரைன் லாரா கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் லாராவிடம் “சார் எப்படி இருக்கீங்க” என்று ஜெய்ஸ்வால் கேட்கிறார்.

- Advertisement -

பணிவான பதில்:

அதற்கு “மோசமாக இல்லை. நன்றாக இருக்கிறேன்” என்று லாரா சொல்கிறார். அத்துடன் “எங்களுடைய பவுலர்களை மோசமாக அடிக்காதே” என்றும் லாரா ஜாலியான கோரிக்கை வைக்கிறார். அதைக்கேட்டு புன்னகைத்த ஜெய்ஸ்வால் “இல்லை. முயற்சிக்கிறேன் சார்” என்று சொல்கிறார். தொடர்ந்து தன்னுடைய ஆட்டம் பற்றி ஜெய்ஸ்வால் பேசியது பின்வருமாறு. “எப்போதும் நான் என்னுடைய அணியை முதலாவதாக வைத்திருக்கிறேன்.”

இதையும் படிங்க: 248 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி.. குல்தீப் யாதவ் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

“குறிப்பிட்ட சமயத்தில் அணிக்காக எது முக்கியம் என்பதற்கு தகுந்தார் போல் விளையாடுகிறேன். அதற்காக எப்படி விளையாட வேண்டும், எந்த ஷாட்டுகளை அடிக்க வேண்டும், பிட்ச் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து பதிலை தேடுகிறேன். அந்த இடங்களில் இருந்தால் முடிந்தளவு நீண்ட நேரம் விளையாட முயற்சிக்கிறேன். ஒருவேளை எனக்கு நல்லத் துவக்கம் கிடைத்தால் அதைப் பெரிதாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறினார். மேலும் சுதர்சன், கில் ஆகியோரும் தம்முடன் இணைந்து நன்றாக விளையாடியதாக ஜெயஸ்வால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement