ஏற்கனவே விராட் கோலியை அதில் பாபர் அசாம் முந்திட்டாரு – மனதார பாராட்டும் வெ.இ ஜாம்பவான்

Babar
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. சொந்த மண்ணில் நடைபெற்ற அந்த தொடரில் ஆரம்ப முதலே அசத்தலாக செயல்பட்ட பாகிஸ்தான் ஒரு போட்டியில் கூட தோற்காமல் 3 – 0 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை முத்தமிட்டது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் வழக்கம்போல அபாரமாக பேட்டிங் செய்தது அந்த அணியின் இந்த எளிதான வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும். கடந்த சில வருடங்களாகவே டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் அட்டகாசமாக பேட்டிங் செய்து வரும் அவர் பாகிஸ்தானின் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக அவதரித்துள்ளார்.

Babar Azam

- Advertisement -

தனது அபாரமான பேட்டிங்கால் நிறைய உலக சாதனைகள் அசால்டாக படைத்து வரும் அவர் பாகிஸ்தானுக்கு முக்கிய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து தற்போதைய தேதியில் உலக அளவில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துள்ளார். இதனால் அவரை உலகின் நம்பர் பேட்ஸ்மேன் என்று நிறைய முன்னாள் வீரர்கள் சமீப காலங்களில் பாராட்டி வருகின்றனர்.

விராட் – பாபர்:
குறிப்பாக கடந்த சில வருடங்களாகவே இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பல ஜாம்பவான்கள் பேசி வருகின்றனர். அதிலும் விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் என்று நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வெளிப்படையாகவே பலமுறை பேசியுள்ளார்கள். அதற்கேற்றாற்போல் கடந்த 3 வருடங்களாக பேட்டிங்கில் சுமாரக செயல்பட்டு வரும் விராட் கோலியை முந்திய பாபர் அசாம் கடந்த 2021 முதல் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார்.

Virat Kohli Babar Azam

மேலும் கடந்த காலங்களில் விராட் கோலி படைத்த ஒருசில கடினமான சாதனைகளையும் அசால்டாக உடைத்த அவர் அவரால் படைக்க முடியாத புதிய சாதனையையும் படைத்தார். இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்த அவர் புதிய சாதனை படைத்தார். அதனால் ஒரு சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இப்போதெல்லாம் விராட் கோலியை விட்டு அவரை சச்சினுடன் ஒப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

- Advertisement -

ஏற்கனவே முந்திட்டாரு:
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியை பாபர் அசாம் ஏற்கனவே கிட்டத்தட்ட முந்தி விட்டதாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயான் பிஷப் தெரிவித்துள்ளார். பொதுவாகவே நியாயமான கருத்துக்களை கூறக்கூடிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பாபர் அசாம் மேன்மையான பாதையில் இருக்கிறார். இந்த சமயத்தில் மேன்மை என்பதை வெள்ளைப் பந்து கிரிக்கெட் அதாவது 50 ஓவர் கிரிக்கெட் என்பதை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்”

“நான் “பெரிய” என்ற சொல்லை தளர்வாக பயன்படுத்தவில்லை. ஒரு வீரருக்கு மகத்துவத்தை வழங்க ஒரு பெரிய முன்மாதிரி இருக்கவேண்டும். அந்த வகையில் தற்போது நாம் பேசும் சராசரியை கூறலாம். 17 ஒருநாள் சதங்களை கிட்டத்தட்ட 60 என்ற சராசரியில் அவர் எடுத்துள்ளார். எனவே ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவரின் அண்டை நாட்டுக்காரரான விராட் கோலியை முந்தியுள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -

பொதுவாக ஒரு பேட்ஸ்மேனின் தரத்தை அவரின் சராசரியை வைத்து மதிப்பிடுவார்கள். அந்த வகையில் இதுவரை 89 போட்டிகளில் 19 அரைசதங்கள் 17 சதங்கள் உட்பட 59.22 என்ற அபாரமான சராசரியில் எடுத்துவரும் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியை ஏறத்தாழ முந்தி விட்டதாக இயன் பிஷப் பாராட்டுகிறார். அவர் கூறுவது போல் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி20) தொடர்ச்சியாக அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் (9 இன்னிங்ஸ்) போன்ற உலக சாதனைகளை படைத்த பாபர் அசாம் ஒரு தரமான பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

Babar Azam Pak Vs Aus

டெஸ்டில் முன்னேறணும்:
இருப்பினும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் கிரிக்கெட்டில் வளரும் வீரராக மட்டுமே பாபர் அசாம் இருப்பதாக தெரிவிக்கும் இயன் பிஷப் வருங்காலங்களில் அதிலும் அவர் முன்னேற்றமடைவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மகத்துவத்துக்கான வேலையில் ஈடுபட்டு உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் பெரிய அளவில் வராதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

இதையும் படிங்க : கிரிக்கெட் வீரர்கள் நாட்டை விட பணத்தை பெரிதாக பார்க்கிறார்கள் – கருத்தை மறுக்கும் கங்குலியின் பதில் இதோ

அதை சிறப்பாக தொடங்கியுள்ள அவர் நுணுக்கங்கள் அடிப்படையில் அற்புதமாக திகழ்கிறார். வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 3 – 4 வீரர்களில் அவரும் ஒருவராக இருப்பார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement