இந்திய மண்ணில் பாகிஸ்தான் வெற்றிக்கொடியை பறக்க விடுவதே லட்சியம் – பாபர் அசாம் அதிரடி பேட்டி, விவரம் இதோ

IND vs PAK Babar Azam Rohit Sharma
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வரிசையில் எல்லை பிரச்சினை காரணமாக இந்திய அரசின் அனுமதியின்றி இந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செயலாளர். ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் நீங்கள் இவ்வாறு பேசியது ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்களது நாட்டுக்கு வரவில்லை என்றால் உங்களது நாட்டில் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர்யில் ஐசிசி உலகக் கோப்பை பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தது.

Jay Shah IND vs PAk

- Advertisement -

இந்த விவகாரம் கடந்த சில மாதங்களாகவே இரு நாட்டுக்குமிடையே சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் நிச்சயம் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆசிய கவுன்சில் தலைவராக ஜெய் ஷா இருப்பதால் ஆசியக் கோப்பை விவகாரத்தில் அவர் எடுக்கும் முடிவே இறுதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையை புறக்கணித்தால் அதற்காக ஐசிசியிடம் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு பணம் பாகிஸ்தானுக்கு கிடைக்காது.

இந்தியாவில் பாகிஸ்தான் வெற்றிக்கொடி:
எனவே தற்போதுள்ள பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தேர்வுக்குழு தலைவர் சாகித் அப்ரிடி ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள பிஎஸ்எல் தொடரில் சதமடிப்பதும் 2023 உலகக் கோப்பையையை கேப்டனாக வென்று இந்திய மண்ணில் பாகிஸ்தானின் வெற்றி கொடியை பறக்க விடுவதே தமது லட்சியம் என்று பாபர் அசாம் வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றி பிஎஸ்எல் தொடரின் ஒரு போட்டிக்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு.

INDvsPAK

“நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. ஆனால் தற்போதைக்கு பிஎஸ்எல் தொடரில் இந்த சீசனில் பெசாவர் ஜால்மி அணிக்காக என்னுடைய முதல் சதத்தை அடிக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும். அதை விட இந்த வருடம் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய முதன்மை லட்சியமாகும். அந்த உலகக் கோப்பையை வெற்றி பெறும் அணியில் என்னுடைய நாட்டின் பெயர் இருப்பதை நான் விரும்புகிறேன். மேலும் நவீன கிரிக்கெட்டில் நீங்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கு சிலவற்றை வித்தியாசமாக முயற்சிக்க வேண்டும்”

- Advertisement -

“இருப்பினும் நான் என்னுடைய அடிப்படையில் தொடர்ந்து விளையாட உள்ளேன். மேலும் சமீபத்திய வலைப்பயிற்சியில் நான் ஒரு சில புதிய ஷாட்டுகளை விளையாட தேவையான பயிற்சிகளை எடுத்தேன். அதில் நிறைய தன்னம்பிக்கை எனக்கு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக போட்டியின் போது அதை நான் பயன்படுத்துவேன். ஏனெனில் தற்போதைய கிரிக்கெட் மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்றார் போல நீங்களும் உங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Babar

ஆனால் இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் முதலில் இந்தியாவுக்கு நீங்கள் வருவதே சந்தேகமாக இருக்கும் நிலையில் எப்படி வெற்றி பெறப் போகிறீர்கள் என்று வழக்கம் போல கலாய்க்கிறார்கள். அத்துடன் கடந்த வருடம் சொந்த மண்ணில் கிட்டத்தட்ட அனைத்து எதிரணிகளுக்கு எதிராகவும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வெற்றி பெற முடியாமல் படு தோல்வியை சந்தித்த நீங்கள் எப்படி இந்தியாவில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்றும் ரசிகர்கள் பதிலளிக்கிறார்கள்.

இதையும் படிங்க:உம்ரான் மாலிக்கை தாண்டி நான் அந்த சாதனையை நிச்சயம் படைப்பேன் – சவால் விட்ட 20 வயது பாக் வீரர்

ஏனெனில் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் எப்போதுமே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட உலகின் அனைத்து அணிகளையும் தெறிக்க விட்டு வரும் இந்தியா வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இந்தியாவில் பாகிஸ்தான் வெற்றி கொடியை பறக்க விட வேண்டும் என்ற லட்சியத்தை எடுப்பதற்கு முன் யோசிக்குமாறு அவருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement