ரஞ்சி கோப்பையில் புதிய சரித்திரத்தை எழுதிய தமிழக சகோதரர்கள் – வேற லெவல் சாதனை

Bab
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் பல தடைகளுக்கு பின் கடந்த வாரம் முதல் வெற்றிகரமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 38 அணிகள் பங்குபெறும் இந்தத் தொடர் 2 பாகங்களாக நடைபெற உள்ளது. அதாவது லீக் சுற்று போட்டிகள் இப்போதும் நாக்-அவுட் சுற்று போட்டிகள் ஐபிஎல் 2022 தொடருக்கு பின்பும் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு கிரிக்கெட் அணி எலைட் குரூப் ஹச் பிரிவில் இடம் பிடித்து விளையாடி வருகிறது. அதில் டெல்லி அணிக்கு எதிராக நடந்த தனது முதல் போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறிய போதிலும் இறுதியில் இளம் வீரர் சாருக்கான் அதிரடியாக 194 ரன்கள் விளாசியதால் அசத்திய தமிழ்நாடு அந்த போட்டியை டிரா செய்தது.

ரெட்டை கதிரே:
இதை தொடர்ந்து இந்த தொடரில் தனது 2-வது லீக் சுற்றுப் போட்டியில் சட்டீஸ்கர் அணியை தமிழ்நாடு எதிர்கொண்டது. கவுகாத்தியில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ranji

இதை அடுத்து பேட்டிங் துவக்கிய தமிழகத்திற்கு தொடக்க வீரர்கள் கவுசிக் காந்தி 27 ரன்களும் சூரியபிரகாஷ் 21 ரன்களும் எடுத்து ஓரளவு சுமாரான தொடக்கத்தை கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாபா இந்திரஜித் மற்றும் பாபா அபராஜித் சகோதரர்கள் பொறுப்புடனும் நிதானத்துடனும் பேட்டிங் செய்து சட்டிஸ்கர் அணியை ஒரு கை பார்க்கத் துவங்கினார்கள். நேரம் செல்ல செல்ல எளிதாக ரன்களை குவிக்க துவங்கிய இந்த ஜோடியில் இருவருமே அபாரமாக பேட்டிங் செய்து 3வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தமிழ்நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்கள்.

- Advertisement -

புதிய சரித்திர சாதனை:
ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக சட்டிஸ்கர் பவுலர்களை பந்தாடிய இந்த இருவருமே ஜோடியாக சதம் விளாசினார்கள். அதில் 147 பந்துகளில் 21 பவுண்டரிகள் உட்பட 127 ரன்களை விளாசிய பாபா இந்திரஜித் முதலாவதாக அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா அபராஜித் 267 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 166 ரன்கள் குவித்து தமிழக அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்த பின்னர் ஆட்டமிழந்தார்.

Baba Abarajith Baba Indrajith Ranji Trophy 2022

இதன் வாயிலாக ரஞ்சி கோப்பை மட்டுமல்லாது ஒட்டுமொத்த முதல்தர உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அணிக்காக ஒரே போட்டியில் ஜோடியாக விளையாடி சதம் அடித்த முதல் இந்திய இரட்டை சகோதரர்கள் என்ற புதிய சரித்திர சாதனையை இவர்கள் படைத்தார்கள். இதற்கு முன்பும் கடந்த 2018ஆம் ஆண்டு திண்டுக்கல் நகரில் நடந்த துலீப் டிராபி போட்டியில் இவர்கள் சதமடித்தார்கள். ஆனால் அந்தப் போட்டியில் அபாரஜித் இந்தியா சிவப்பு அணிக்காகவும் இந்திரஜித் இந்தியா பச்சை அணிக்காகவும் விளையாடி இருந்தார்கள். ஆனால் இப்போது ஒரே அணியில் இந்த இருவரும் விளையாடி சதமடித்து அரிதினும் அரிதான புதிய சரித்திர சாதனை படைத்துள்ளார்கள்.

- Advertisement -

வலுவான நிலையில் தமிழகம்:
இவர்களின் இந்த அடுத்தடுத்த சதங்களை தொடர்ந்து கடைசி நேரத்தில் மீண்டும் அசத்திய இளம் வீரர் சாருக்கான் 69 ரன்கள் எடுத்ததால் இந்த போட்டியில் தமிழ்நாடு தனது முதல் இன்னிங்சை 470/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதைத் தொடர்ந்து தற்போது சட்டீஸ்கர் அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

Tamilnadu

இந்த சரித்திர சாதனை பற்றி இந்திரஜித் கூறியது பின்வருமாறு.”குழந்தையில் இருந்தே ஒன்றாக விளையாடி வரும் எங்களுக்கு ஒன்றாக பேட்டிங் செய்வது என்றால் ஜாலியான ஒன்றாகும். கடந்த முறை நாங்கள் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடிய போது சதமடித்து இருந்தோம். ஆனால் இந்த முறை ஒரே அணியில் அதுவும் தமிழ்நாட்டிற்காக விளையாடி ஒன்றாக சதம் அடித்துள்ளது உண்மையாகவே மிகச் சிறந்த உணர்வாக உள்ளது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

- Advertisement -

தனது சகோதரருடன் விளையாடி சாதனை படைத்தது பற்றி அபாரஜித் கூறியது பின்வருமாறு. “அவர் மிகச் சிறப்பாக அடித்ததால் நான் எந்த தவறும் செய்துவிடக் கூடாது என்று நினைத்தேன். மேலும் பிட்ச் மெதுவாக இருந்ததால் முதலில் செட்டிலாகி அதற்குப் பின் பெரிய ஷாட்களை அடித்தேன்” என கூறினார்.

இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான தொடரில் இவரை ஏன் சேத்தீங்க? அப்படி என்ன அவசியம் – ஆஷிஷ் நெஹ்ரா அதிருப்தி

மொத்தத்தில் தமிழ் நாட்டிற்காக ஒரு புதிய அரிதான சாதனை செய்துள்ள இவர்களால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள் என்றே கூறலாம். இவர்களுக்கு விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழக ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement