சி.எஸ்.கே அணிக்காக தனித்துவமான சாதனையை நிகழ்த்திய ஆயுஷ் மாத்ரே – இவர்தான் பியூச்சர் ஸ்டார்

Ayush Mhatre
- Advertisement -

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறுவதற்கு பின்னர் அவருக்கு மாற்று வீரராக அணிக்குள் இணைந்த 17 வயதான ஆயுஷ் மாத்ரே கடந்த சில போட்டிகளாகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி பாராட்டுகளையும் பெற்று வருகின்றார்.

சி.எஸ்.கே அணிக்காக ஆயுஷ் மாத்ரே நிகழ்த்திய சாதனை :

அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் விளையாடியிருந்தார். அந்த வகையில் நேற்று அவர் விளையாடிய இந்த போட்டியில் 214 ரன்கள் என்கிற இலக்குடன் சி.எஸ்.கே அணி விளையாடிய போது :

- Advertisement -

துவக்க வீரராக களமிறங்கிய அவர் 48 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 94 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் ஆயுஷ் மாத்ரேவின் அற்புதமான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

மேலும் அவர் அடித்த இந்த 94 ரன்கள் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மிக குறைந்த வயதில் அரைசதம் அடித்த சி.எஸ்.கே வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி 14 வயதிலும், ரியான் பராக் 17 வயதிலும் அரைசதம் அடித்திருந்த வேளையில் மூன்றாவது இளம் வீரராக தனது 17வது வயதில் ஆயுஷ் மாத்ரே அரைசதம் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதன்மூலம் 18 வயதிற்குள் ஐபிஎல் போட்டிகள் அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதோடு சி.எஸ்.கே அணிக்காக மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரராக சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். சி.எஸ்.கே அணிக்காக சுரேஷ் ரெய்னா தனது 21 வயதில் அரைசதம் அடித்திருந்தார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் வொர்ஸ்ட் பவுலராக மிக மோசமான சாதனையை நிகழ்த்திய கலீல் அகமது – விவரம் இதோ

இவ்வேளையில் நேற்றைய போட்டியின் மூலம் அவரது இந்த சாதனையை முறியடித்துள்ள ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே அணிக்காக மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement