இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 43 ஆவது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது :
ராஜஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு : அக்சர் படேல் மகிழ்ச்சி
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ரியான் பராக் 90 ரன்களையும், டோனவன் பெரேரா 47 ரன்களையும் குவித்தனர். பின்னர் 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது : இன்றைய போட்டியில் எங்களுடைய அணியின் வீரர்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலும் எங்களது அணியின் வீரர்கள் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில் நாங்கள் கையில் எடுத்த திட்டங்கள் எல்லாம் சரியாக நடந்ததால் போட்டியின் முடிவில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைத்திருக்கிறது. இப்படி எல்லாமே சரியாக நடந்து வெற்றி கிடைக்கும் போது ஒரு கேப்டனாக வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு வேண்டும். எதிரணி வீரர்களை எங்களது வீரர்கள் மிகச்சிறப்பாக கையாண்டனர். சேஸிங்கிலும் அற்புதமாக ஆட்டத்தை கொண்டு சென்றதாக உணர்கிறேன்.
இதையும் படிங்க : பயிற்சி செய்தாலும் போட்டியின் போது தோனி ஏன் மைதானத்திற்கு வருவதில்லை? – மைக்கல் ஹசி விளக்கம்
மிட்சல் ஸ்டார்க் ஒரு ஜாம்பவான் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த போட்டியின் மூலம் நிரூபித்துள்ளார். காயத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் களத்திற்கு திரும்பிய அவர் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அவர் ஏன் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்பதை இந்த போட்டியில் தனது செயல்பாட்டின் மூலம் காண்பித்துள்ளார் என அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.



