இந்த வெற்றி எங்களுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.. ராஜஸ்தானை வீழ்த்திய பிறகு பேசிய – அக்சர் படேல்

Axar Patel
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 62-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரின் பிளே ஆப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ராஜஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு : அக்சர் படேல் பேச்சு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது. பின்னர் 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது : சொந்த மண்ணில் வெற்றி பெறுவது என்பது எப்போதுமே மிகச் சிறப்பான ஒரு விடயம். அதிலும் குறிப்பாக தொடர்ச்சியாக நீண்ட தோல்விகளை சந்தித்த பிறகு இறுதியாக இந்த வெற்றி கிடைத்துள்ளது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. அதோடு இந்த தொடரின் கடைசி ஹோம் மேட்ச் இது என்பதனால் இந்த வெற்றி ரொம்ப ஸ்பெஷலாக அமைந்துள்ளது.

சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு மத்தியில் அவர்களது ஆதரவோடு விளையாடி வெற்றி பெறும்போது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியையும் அது தந்தது. இந்த போட்டியில் நாங்கள் சரியான விதத்தில் விளையாடியதாக உணர்கிறேன். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் எங்களது அணியின் வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தமாதிரி ஆடுனா பிளே ஆப் போகமுடியாது.. டெல்லி அணிக்கெதிரான தோல்விக்கு பின் – ரியான் பராக் பேட்டி

குறிப்பாக இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேபோன்று பேட்டிங்கிலும் துவக்க வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்ததோடு இறுதி வரிசையிலும் சரியான முறையில் போட்டியை பேட்ஸ்மேன்கள் முடித்துக் கொடுத்தார்கள். எனவே இந்த வெற்றியை ஒரு முழுமையான வெற்றியாக பார்க்கிறேன் என அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement