அஷுதோஷ் சர்மாவிற்கு பதிலாக சமீர் ரிஸ்விவை இம்பேக்ட் வீரராக களமிறக்கியது ஏன்? – அக்சர் படேல் விளக்கம்

Axar Patel and Sameer Rizvi
- Advertisement -

லக்னோ நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய டெல்லி அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சமீர் ரிஸ்வியை விளையாட வைத்தது ஏன்? : அக்சர் படேல் விளக்கம்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 145 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 47 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 70 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்று ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். இந்நிலையில் நேற்றைய இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் அஷுதோஷ் சர்மா இருந்தும் சமீர் ரிஸ்வியை இம்பேக்ட் வீரராக களமிறக்கியது ஏன்? என்பது குறித்த கேள்விக்கும் பதிலளித்து இருந்தார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் சமீர் ரிஸ்வியை விளையாட வைக்க வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் இருந்தது. ஏற்கனவே இந்த ஆப்ஷனில் அஷுதோஷ் சர்மா இருந்தாலும் இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே நாங்கள் நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டோம். இந்த சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது.

- Advertisement -

எனவே இந்த இடத்தில் பினிஷரான அஷுதோஷ் சர்மாவுக்கு பதிலாக இன்னிங்ஸ்சை நிலைப்படுத்தும் சமீர் ரிஸ்வியை கொண்டுவர வேண்டும் என்று நினைத்தோம். அஷுதோஷ் சர்மா கடந்த ஆண்டு இம்பேக்ட் வீரராக எங்களுக்கு மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் இம்முறை அவரை தாண்டி சமீர் ரிஸ்வியை இந்த சூழ்நிலையில் விளையாட வைக்க முடிவு செய்தோம்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் போட்டிகளில் மகத்தான சாதனையை முதல் பந்தில் நிகழ்த்திய முகமது ஷமி – விவரம் இதோ

அவரும் மிகச் சிறப்பாக விளையாடி போட்டியை முடித்து கொடுத்தார். இந்த தொடருக்கு முன்னதாக அவர் இந்த தொடருக்காக தயாராகிய விதம் அற்புதமாக இருந்தது. இன்னும் அவர் மென்மேலும் தனது திறனை முன்னேற்றுவார் என்பதிலும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement