
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18 ஆவது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 115 ரன்களையும் ஆயுஷ் மாத்ரே 59 ரன்களையும் குவித்தனர். பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது :
20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை குவித்தது. இதன் காரணமாக சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் கூறியதாவது : நாங்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பான துவக்கத்தை கண்டிருந்தோம்.
ஆனாலும் சேஸிங்கின் போது பவர்பிளே முடிந்த பின்னர் இரண்டு மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் அதிலிருந்து மீண்டு வர சற்று கடினமாக இருந்தது. அதேபோன்று இந்த போட்டியில் ஃபீல்டிங்கும் ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. தேவையான நேரத்தில் சென்னை அணிக்கு விக்கெட்டுகள் கிடைக்கவே அவர்கள் போட்டிக்குள் வந்துவிட்டனர்.
இதையும் படிங்க : எங்களுடைய இந்த அசத்தலான வெற்றிக்கு காரணம் இதுமட்டும் தான்.. முதல் வெற்றிக்கு பிறகு – ருதுராஜ் மகிழ்ச்சி
எங்களது பேட்ஸ்மேன்கள் சற்று சிறப்பாக விளையாடியிருந்தாலும் சேசிங்கின் போது நல்ல பார்ட்னர்ஷிப்பை கொண்டு செல்ல வேண்டியது அவசியம். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டும் பெரிய பார்ட்னர்ஷிப் பேட்டிங்கில் இல்லாததால் நாங்கள் தோல்வியை சந்தித்தோம் என அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.