- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் போட்டிகளில் எனக்கு பிடிக்காத ஒரு ரூல்ஸ் இதுதான் – அக்சர் பட்டேல் கருத்து

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கும் இந்த ஐபிஎல் தொடரானது மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு காத்திருக்கிறது.

ஐ.பி.எல் தொடரில் எனக்கு பிடிக்காத விதி இதுதான் : அக்சர் படேல்

இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் பட்டேலும் தங்களது அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

இந்தமுறை டெல்லி அணி தங்களது பலமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஒரு சந்திப்பில் ஐபிஎல் போட்டிகளில் தனக்கு பிடிக்காத விதிமுறை குறித்து அக்சர் பட்டேல் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி உள்ளது. அது எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் இந்த விதி இருப்பதினால் ஆல்ரவுண்டர்களின் செயல்பாடு குறைவதாக கருதுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : நீங்க ரொம்ப நல்ல மனுஷன்.. ஆனா இதை மட்டும் விட்டுடுங்க.. கம்பீருக்கு – சவுரவ் கங்குலி அறிவுரை

ஏனெனில் இம்பேக்ட் வீரர் மூலம் பேட்டிங் செய்தால் பேட்ஸ்மேனையோ பந்து வீசுகையில் பவுலரையோ பயன்படுத்திக் கொள்கிறோம். அதனால் ஆல்ரவுண்டர்களின் பயன் இல்லாமல் போகிறது இருந்தாலும் இது விதிமுறை. எனவே அதை பின்பற்றி தான் விளையாட வேண்டும் என்றும் அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -