இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் தனது பதவியில் இருந்து விலகியதற்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ எவ்வித போட்டியும் இன்றி கௌதம் கம்பீரை நேரடியாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அறிவித்தது. அவரது தலைமையின் கீழ் இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் பெரிய சரிவை சந்தித்துள்ளது.
கவுதம் கம்பீருக்கு அறிவுரை வழங்கிய சவுரவ் கங்குலி :
இந்திய அணியை பொருத்தவரை கௌதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் 2025 சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை தொடர் மற்றும் 2026 டி20 உலக கோப்பை என அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. ஆனாலும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று பலரும் பேசி வருகின்றனர்.
அதேவேளையில் டெஸ்ட் அணியை சரியாக கட்டமைத்து கொண்டுவர இன்னும் சில காலம் ஆகும் என்றும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்றும் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கம்பீர் கிரிக்கெட்டில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி அவருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : கிரிக்கெட்டில் கம்பீரின் ஆக்ரோஷமான குணம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு வீரராக இருந்தாலும் சரி, பயிற்சியாளராக இருந்தாலும் சரி அவர் பல சமயங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார். அப்படி நடந்து கொள்வது சாதகமாக அமைந்தாலும் களத்தில் மோதல்கள் ஏற்படுவதற்கு காரணமாகவும் இருந்துள்ளது.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனா அவரை மாத்துங்க – சீக்கா கருத்து
எனவே அவரை போன்ற ஒரு நல்ல மனிதர் முரட்டுத்தனத்தையும், கடுமையாக நடந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என கங்குலி அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கவுதம் கம்பீர் 2027 ஒருநாள் உலககோப்பை தொடர் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.



