
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தையும் கேள்வியையும் எழுப்பியிருந்தது. ஏனெனில் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரவீந்திர ஜடேஜா தற்போது இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அனுபவ சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அவருக்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவை தாண்டி அக்சர் பட்டேலுக்கு ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பு வழங்கி உள்ளது. அதேபோன்று கூடுதல் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தரும், முதன்மை சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒருநாள் போட்டிகளில் இனி ரவீந்திர ஜடேஜாவின் கரியர் நீடிக்காது என்றே தெரிகிறது.
தற்போது 36 வயதான ரவீந்திர ஜடேஜா இனியும் ஒருநாள் அணியில் நீடிக்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக இந்திய அணி இளம் வீரர்களை நோக்கி நகர்ந்துவிட்டது என்பது இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தேர்வின் முடிவில் தெரிந்துவிட்டது. இதனால் ஜடேஜாவின் கரியர் ஒருநாள் போட்டிகளில் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம்.
அதேவேளையில் அவரது இடத்தை நிரப்ப சரியான வீரர் அக்சர் பட்டேல் தான் என்றும் அவருக்கு ஒருபுறம் ஆதரவு குவிந்துள்ளது. ஏனெனில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்படும் அக்சர் பட்டேல் அவரது இடத்தை சரியாக நிரப்புவார் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆஸ்திரேலியா தொடரில் ரவிந்திர ஜடேஜாவை தாண்டி தனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்சர் பட்டேல் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த ஆஸ்திரேலிய தொடரில் ரவீந்திர ஜடேஜாவை தாண்டி என் மீது நிர்வாகம் நம்பிக்கை வைத்திருக்கிறது. அவர்களது நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நம்பிக்கையும் என்னிடம் உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் நான் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டிருந்தேன்.
இதையும் படிங்க : சுப்மன் கில் ஒருநாள் கேப்டனாக மென்மேலும் சிறப்பாக வளர அவர்கள் இருவரும் தோள் கொடுப்பார்கள் – அக்சர் படேல் பேட்டி
அதே பார்மை மீண்டும் இந்த ஆஸ்திரேலியா தொடரில் வெளிக்காட்டுவேன். ஆஸ்திரேலிய மண்ணில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் விளையாட இருப்பது சவாலான விடயம் தான். ஆனாலும் அதனை எதிர்கொள்ள தயாராக காத்திருக்கிறேன் என அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.