எங்களோட பார்ட்னர்ஷிப் வளரும்ன்னு நம்புறேன்.. ஆஸியை வீழ்த்திய ஆட்டநாயகன் அக்சர் படேல் பேட்டி

Axar Patel 32
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா 2023 உலகக் கோப்பை ஃபைனல் தோல்விக்கு ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக ஆரம்பத்திலேயே இத்தொடரின் கோப்பையை கைப்பற்றிய இந்தியா டிசம்பர் 3ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 161 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 53 (37) அக்சர் படேல் 31 (21) ரன்கள் எடுத்தனர். ஆனால் அதைச் சேசிங் செய்த ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பவுலிங் பார்ட்னர்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் டெக்மோர்ட் 54 (36) ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை சாப்பிட்டார். அந்த வகையில் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தாலும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவை தோற்கடிக்கும் அளவுக்கு இந்தியாவிடம் இளம் வீரர்கள் வலுவாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் முக்கியமான 31 ரன்கள் பந்து வீச்சில் 4 ஓவரில் வெறும் 14 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியில் பனியின் தாக்கம் இருந்த போதிலும் இதற்கு முன் இதே போன்ற சூழ்நிலையில் விளையாடியது இன்று அசத்த உதவியதாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் ரவி பிஷ்னோயுடன் சேர்ந்து மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியதாக தெரிவிக்கும் அவர் தங்களுடைய பவுலிங் பார்ட்னர்ஷிப் தொடர வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இன்றைய போட்டி வேடிக்கையாக இருந்தது. முதல் நான்கு போட்டிகளில் பனியன் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போட்டியில் இருந்த பிட்ச் எனக்காகவே செய்யப்பட்டது போல் அமைந்தது”

இதையும் படிங்க: எங்களோட பார்ட்னர்ஷிப் வளரும்ன்னு நம்புறேன்.. ஆஸியை வீழ்த்திய ஆட்டநாயகன் அக்சர் படேல் பேட்டி

“மேலும் கடந்த சில போட்டிகளில் நன்றாக பந்து வீசியதால் இப்போது எனக்கு நல்ல ரிதம் கிடைத்துள்ளது. ரவி பிஷ்னோயுடன் இதற்கு முன் குஜராத் அணிக்காகவும் இணைந்து விளையாடியுள்ளேன். அந்த வகையில் சிறப்பாக செயல்படுவதற்கு நாங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம். எங்களுடைய இந்த பார்ட்னர்ஷிப் வளரும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement