IND vs AUS : அவர் இல்லனா தோத்துருப்போம், அவரோட சொந்த ஊர் அஹமதாபாத்ல ட்ராப் பண்ணாதீங்க – சபா கரீம் கோரிக்கை

Karim
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 2 – 1* (4) என்ற கணக்கில் முன்னிலை வகித்தாலும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அகமதாபாத் நகரில் மார்ச் 9ஆம் தேதி துவங்கும் கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

Axar Patel 1

- Advertisement -

முன்னதாக சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்டிருக்கும் இந்த தொடரில் ஸ்பின்னர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறுவதே இந்தியாவுக்கு பின்னடைவாக இருந்து வருகிறது. குறிப்பாக விராட் கோலி, புஜாரா ஆகியோர் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவை கைவிட்டு வருகிறார்கள். அதே போல் கேப்டன் ரோஹித் சர்மாவும் முதல் போட்டியில் அடித்த சதத்தை தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் பெரிய ரன்களை குவிக்காமல் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறார்.

ட்ராப் பண்ணாதீங்க:
அப்படிப்பட்ட நிலையில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், அஷ்வின் ஆகிய 3 சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களால் தான் இதுவரை இந்தியா 2 வெற்றிகளை பெற்றது என்றே சொல்லலாம். குறிப்பாக 185 ரன்களை 92.50 என்ற சிறப்பான சராசரியில் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வரும் அக்சர் படேல் தாறுமாறாக சுழன்ற இந்தூர் பிட்ச்சில் 2 இன்னிங்சிலும் கடைசி வரை அவுட்டாகாமல் நின்றார். இருப்பினும் பந்து வீச்சில் அஷ்வின் – ஜடேஜா ஆகியோர் கொத்தாக விக்கெட்டுகளை எடுத்து விடுவதால் இதுவரை அவர் 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.

Axar Patel Ashwin

ஆனால் அகமதாபாத் நகரில் நிச்சயம் வென்றாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதில் 3வது ஸ்பின்னராக அதிக விக்கெட்களை எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன. ஆனால் அக்சர் படேல் விளையாடாமல் இருந்திருந்தால் 2 – 1 என்ற கணக்கில் தற்போது இந்தியா முன்னிலை வகிக்காது என்று முன்னாள் வீரர் சபா கரீம் கூறியுள்ளார். அத்துடன் அகமதாபாத் அவருடைய சொந்த ஊர் என்பதால் நிச்சயமாக அக்சர் பட்டேல் கடைசி போட்டியில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியா அக்சர் படேலை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும். அவர் சிறப்பாக பேட்டிங் செய்த காரணத்தாலேயே தற்போது 2 – 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இத்தொடரில் இதுவரை ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 முதன்மை ஸ்பின்னர்கள் அதிக ஓவர்களை வீசி விக்கெட்டுகளை எடுத்ததால் அவருக்கு பந்து வீசுவதற்கே அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே அவர் பெஞ்சில் அமர்வதற்கு தகுதியானவர் கிடையாது. அதை விட அகமதாபாத் அவருடைய சொந்த ஊராகும். அவருக்கு அந்த மைதானத்தின் பவுண்டரி அளவுகள் மற்றும் சூழ்நிலைகள் நன்றாக தெரிந்திருக்கும். அதனால் நிச்சயமாக அவர் கடைசி போட்டியில் விளையாட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Karim

அவர் கூறுவது போல கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தனது சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தின் நடந்த 2 போட்டிகளிலும் அற்புதமாக செயல்பட்ட அக்சர் படேல் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். எனவே மற்ற வீரர்களை விட சொந்த மைதானத்தை பற்றி நன்கு தெரிந்துள்ள அவர் 4வது போட்டியில் நிச்சயமாக விளையாட தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: IND vs AUS : 4வது போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அத்துடன் இந்திய அணி ஸ்பின்னர்கள் விக்கெட்டுகள் எடுக்காததால் பின்னடைவை சந்திக்கவில்லை. மாறாக பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்காததால் தான் 3வது போட்டியில் தோற்றது. எனவே 3வது போட்டியில் தோற்றதற்கும் அக்சர் பட்டேலுகும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சொல்லலாம்.

Advertisement