- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி சதத்துக்காக நான் கணக்கு போட்டேன்.. 50 ஓவருக்கு அப்றமும் இது வேற லெவல்.. அக்சர் படேல்

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்தாவது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 20, சுப்மன் கில் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் எடுத்தனர்.

அவர்களுடன் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பி 100* ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தன்னை சாம்பியன் வீரர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். முன்னதாக அந்தப் போட்டியில் விராட் கோலி நிதானமாக விளையாடிய நிலையில் பாண்டியா வேகமாக ஃபினிஷிங் செய்ய முயற்சித்து அவுட்டானார்.

- Advertisement -

விராட் கோலிக்காக கணக்கு:

அப்போது விராட் கோலி 86 ரன்களில் இருந்த நிலையில் இந்தியாவுக்கு 19 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது. அவருக்கு அடுத்ததாக களமிறங்கிய அக்சர் படேல் ஸ்ட்ரைக்கை கொடுத்து சதத்தை அடிக்க உதவ முயற்சித்தார். ஆனால் 42வது ஓவரில் சாகின் அப்ரிடி ஒய்ட் பந்துகளை வீசியதால் அது இன்னும் கடினமானது.

இறுதியில் அந்த ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்த அவர் விராட் கோலிக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்தார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் விராட் கோலி பவுண்டரி அடித்து தன்னுடைய சதத்தை அடித்தார். இந்நிலையில் விராட் கோலி சதத்தை அடிப்பதற்காக தாம் கணக்குப் போட்டதாக அக்சர் பட்டேல் கூறியுள்ளார்.

- Advertisement -

ஃபிட்னெஸ் லெவல்:

மேலும் 50 ஓவர்கள் பேட்டிங் செய்த பின்பும் வேகமாக ஓடி விளையாடி சதம் அடித்த விராட் கோலியின் ஃபிட்னெஸ் வேற லெவல் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடைசி நேரத்தில் விராட் கோலியின் சதத்தை பற்றி நானும் கணக்கு போட்டேன். அந்த சமயத்தில் நான் எட்ஜ் கொடுத்து தெரியாதத்தனமாக கூட பவுண்டரிக்கு அடித்து விடக்கூடாது என்று நம்பினேன்”

இதையும் படிங்க: பாகிஸ்தான் வீரர்கள் செய்த தவறால் தான் கோலி செஞ்சுரி அடிச்சாரு.. தவறை சுட்டிக்காட்டிய – சுனில் கவாஸ்கர்

“அது ஜாலியாக இருந்தது. முதல் முறையாக இந்திய அணியில் இருந்து ஒரு அதிகப்படியான அழுத்தம் நிறைந்த ஆட்டத்தில் விராட் கோலி சதத்தை அடிப்பதை நேராக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது நானும் நிறைய வேடிக்கையான அனுபவங்களைப் பெற்றேன். 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்த பின்பும் விராட் கோலி ரன்கள் எடுப்பதற்கு வேகமாக ஓடினார். அது எந்தளவுக்கு அவர் தனது ஃபிட்னஸ் லெவலை பின்பற்றுகிறார் என்பதைக் காட்டுகிறது” எனக் கூறினார்.

- Advertisement -