IND vs AUS : ஒரு கவலை தீர்ந்தது, டி20 உ.கோ இடத்தை அவர் கன்பார்ம் பண்ணிட்டாரு – சபா கரீம் பாராட்டு

Karim
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கி தலை குனிந்தது. அந்த நிலைமையில் செப்டம்பர் 23ஆம் தேதியான நேற்று நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் களமிறங்கிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சொந்த மண்ணில் சுலபமாக சாய்ந்து விட மாட்டோம் என்ற வகையில் ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. நாக்பூரில் மழையால் பாதிக்கப்பட்ட 8 ஓவர்களாக நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேத்தியூ வேட் 43*, ஆரோன் பின்ச் 31 (15) ஆகியோரது அதிரடியால் 90/5 ரன்கள் குவித்தது.

ROhit Sharma Matthew Wade

- Advertisement -

அதை துரத்திய இந்தியாவுக்கு சுழலில் அசத்திய ஆடம் ஜாம்பாவிடம் விராட் கோலி, ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஆனால் மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46* (20) ரன்களை விளாசி வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் ரோகித் சர்மாவின் அதிரடியால் இந்தியா வென்றாலும் பந்து வீச்சில் மீண்டும் அக்சர் பட்டேல் தவிர ஏனைய பவுலர்கள் அனைவரும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கி சுமாராகவே செயல்பட்டனர்.

அசத்தும் அக்சர்:
குறிப்பாக பவர்பிளே ஓவரான 2வது ஓவரிலேயே பந்து வீசிய அக்சர் படேல் அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய கிளன் மேக்ஸ்வெலை கோல்டன் டக் அவுட்டாக்கி மற்றொரு அதிரடி வீரர் டிம் டேவிட்டையும் தன்னுடைய 2வது ஓவரில் கிளீன் போல்ட்டாக்கினார். அந்த வகையில் அனுமதிக்கப்பட்ட 2 ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெறும் 13 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் 6.50 என்ற சிறப்பான எக்கனாமியில் பந்து வீசினார். அதைவிட மொகாலியில் 10க்கும் எக்கனாமியில் வாரி வழங்கிய எஞ்சிய இந்திய பவுலர்களுக்கு மத்தியில் 4 ஓவரில் வெறும் 17 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் 4.25 என்ற சிறப்பான எக்கனாமியில் தங்கமாக பந்து வீசினார்.

Axar Patel

சமீப காலங்களாக இது போன்ற நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியில் விளையாடி வரும் இவர் விரைவில் நடைபெறும் உலகக் கோப்பையில் காயத்தால் வெளியேறிய ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த நிலையில் பந்து வீச்சில் சஹால் போன்ற முதன்மை ஸ்பின்னரை விட அற்புதமாக செயல்படும் அவர் பேட்டிங்கிலும் நல்ல பார்மில் இருப்பது உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பலத்தை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பையில் ஜடேஜா வெளியேறியதால் ஏற்பட்ட கவலையை போக்கும் அளவுக்கு அக்சர் படேல் செயல்படுவதாக பாராட்டும் முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரிம் அவர் உலக கோப்பை 11 பேர் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Karim

“அக்சர் படேல் தன்னுடைய இடம் (உலகக்கோப்பையில்) உறுதியாகி விட்டதை காட்டியுள்ளார். நல்ல நுணுக்கமும் முதிர்ச்சியும் பெற்றுள்ள அவர் புத்திசாலித்தனமாக பந்து வீசுகிறார். அடுத்தடுத்த போட்டிகளில் அவருடைய பங்களிப்பு இந்திய அணிக்கு மிகப் பெரிய பலத்தை கொடுத்துள்ளது. அவரை பவர்ப்ளே ஓவரில் கச்சிதமாக பயன்படுத்திய ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்தது. அதனால் கேமரூன் க்ரீனை விராட் கோலி ரன் அவுட் செய்தார். மேலும் கிளென் மேக்ஸ்வெலை முதல் பந்திலேயே அவுட்டாக்கிய அக்சர் பட்டேல் 4வது ஓவரில் டிம் டேவிட் விக்கெட்டையும் எடுத்தார்.

“அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் 2 பவர் ஹிட்டர்களை அவர் எளிதாக அவுட்டாக்கினார். மேலும் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தில் இந்திய அணியில் விளையாடும் அக்சர் பட்டேல் மிகச் சிறப்பாக செயல்படுவது இந்திய அணிக்கு வலுவை சேர்க்கிறது. அது போக அவருடைய பேட்டிங்கும் முன்னேறியுள்ளதால் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தில் விளையாட அவர் தான் தகுதியான மாற்று வீரர்” என்று கூறினார். இப்படி பந்து வீச்சில் தனது திறமைகளைக் காட்டும் அக்சர் பட்டேல் ஏற்கனவே சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கடைசி நேரத்தில் தனி ஒருவனாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement