காயத்திலிருந்து மீண்டு வந்த அக்சர் படேல். சையத் முஷ்டாக் அலி தொடரில் காட்டடி பேட்டிங் – விவரம் இதோ

Axar-Patel
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டான அக்சர் பட்டேல் ஜடேஜாவிற்கு பிறகு அவரது இடத்தை நிரப்புவார் என்பதனால் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்து இந்திய அணி அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் மிக கச்சிதமாக பிடித்துக் கொண்ட அக்சர் பட்டேல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் நிரந்தர வீரராகவும் மாறி விளையாடி வந்தார்.

அதனை தொடர்ந்து இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் அவரது பெயர் இடம் பெற்றது. பிளேயிங் லெவனில் அவர் விளையாட மாட்டார் என்றாலும் நிச்சயம் இந்திய அணி உடனே பயணிப்பார் என்று பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் உலகக்கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ வீரரான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து அக்சர் பட்டேல் எப்பொழுது காயத்திலிருந்து மீண்டு வருவார் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஏனெனில் இந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னதாக ரவீந்திர ஜடேஜாவிற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காது என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதன் காரணமாக அவரது இடத்தை பூர்த்தி செய்யும் வீரராக அக்சர் பட்டேல் பார்க்கப்படுகிறார் என்பதால் அவர் தயாராக வேண்டும் என்பதை அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அந்த வகையில் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அக்சர் பட்டேல் இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : நம்பர் ஒன் பாபரை முந்த நூலிழையில் ரெடியான கில்.. தரவரிசையில் முன்னேறிய கிங் கோலி, ரோஹித்

குஜராத் அணிக்காக விளையாடி வரும் அக்சர் பட்டேல் அக்டோபர் 23-ஆம் தேதி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கம்பேக் கொடுத்தது மட்டுமின்றி அந்த போட்டியில் பேட்டிங்கில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 27 பந்துகளில் நான்கு சிக்சர் உட்பட அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். பந்துவீச்சிலும் 4 ஓவர்களை முழுவதுமாக வீசியுள்ளார். இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அவர் நிச்சயம் விரைவில் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement