தோனியிடம் பெற்ற பாராட்டு என்னை உற்சாகப்படுத்தியது. ரிஷப் பண்ட் பவுலர்களின் கேப்டன் – இளம்வீரர் நெகிழ்ச்சி

Avesh
- Advertisement -

ஐபிஎல் லீக் தொடரில் கடந்த இரண்டு வருடங்களாக டெல்லி அணி மிகப் பெரிய அளவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு விளையாடி வருகிறது. 2019-ம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி அணி கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. டெல்லி அணியை ஸ்ரேயாஸ் ஐயர் மிக சிறப்பாக வழிநடத்தியது இந்த தொடர் வெற்றிக்கு காரணம் என எல்லோர் மத்தியிலும் பேசப்பட்டது.
இந்த ஆண்டும் ஐயர் மீண்டும் டெல்லி அணியை மிக சிறப்பாக தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்த வேளையில் தோள்பட்டையில் அவருக்கு மிகப் பெரிய காயம் ஏற்பட்டது, அதன் காரணமாக ஐபிஎல் லீக் தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.

- Advertisement -

அதனால் டெல்லி அணியை தலைமை தாங்கும் பொறுப்பை ரிஷப் பண்ட் இடம் கொடுக்கப்பட்டது. ரிஷப் பண்ட் சிறப்பாக வழிநடத்துவார் என்று எல்லோரும் கணித்தது போல நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தர வரிசை புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது.

டெல்லி அணிக்கு குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இதுவரை நடந்த 4 போட்டிகளில் மிக சிறப்பாக பந்துவீசி மொத்தமாக எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Avesh 2

அண்மையில் பேசிய அவர் ரிஷப் பண்ட் டெல்லி அணியை மிக சிறப்பாக தலைமை தாங்கி வருவதாக கூறியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் அணியையும், அணியின் வீரர்களையும் கைவிடாமல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறார். அவர் மிகக் கூலாகச் அனைத்து விஷயங்களையும் கையாளுகிறார். அணியில் சீனியர் வீரர்களான உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் ஷர்மா இருக்கையில் தனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அவர் வழங்கி வருவதாகவும் அதற்கு தான் நன்றி கடன் பட்டு உள்ளதாகவும் ஆவெஷ் கான் கூறியுள்ளார்.

சென்னைக்கு எதிரான போட்டியில் அவ்வளவாக மகேந்திரசிங் தோனியுடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் ஆனால் அந்தப் போட்டியில் தான் நன்றாக விளையாடியதாக மகேந்திர சிங் தோனி பாராட்டு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். தோனியிடம் இருந்து வந்த பாராட்டு தன்னை மிகவும் உற்சாகப்படுத்தி உள்ளதாகவும் ஆவேஷ் கான் கூறியுள்ளார்.

Advertisement