2வது டெஸ்டில் ஜெயிக்க ஷமிக்கு பதிலாக.. மற்றொரு சொதப்பல் பவுலரை இந்திய அணியில் சேர்த்த பிசிசிஐ

Mohammed Shami
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு முதலில் நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்து அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்றது. ஆனால் அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் முதன்மை வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சமும் போராடாமல் இன்னிங்ஸ் தோல்வியை கூட தவிர்க்க முடியாத அளவுக்கு மோசமாக விளையாடியது. அதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் உடைந்து போனது.

- Advertisement -

பிசிசிஐ அறிவிப்பு:
இந்த தோல்விக்கு பவுலிங் துறையில் பும்ரா, சிராஜ் ஆகியோரை தவிர்த்து சர்துள் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வள்ளலாக ரன்களை வாரி வழங்கி சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக முகமது ஷமிக்கு பதிலாக அறிமுக வீரராக களமிறங்கிய பிரசித் கிருஷ்ணா முதல் போட்டியிலேயே சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்தது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இத்தொடரின் 2வது போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் முகமது ஷமி விலகிய போது அதற்கான மாற்று வீரரை அறிவிக்காமல் இருந்த பிசிசிஐ தற்போது அந்த இடத்தில் ஆவேஷ் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

- Advertisement -

இருப்பினும் இதைப் பார்க்கும் ரசிகர்கள் வெற்றிக்கு போராட முகமது ஷமியின் இடத்தில் இப்படி ஒரு பவுலரையா அறிவிப்பீர்கள் என்று கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் இதுவரை 36 போட்டிகளில் விளையாடியுள்ள ஆவேஷ் கான் வெறும் 38 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். அத்துடன் சமீப காலங்களில் இந்தியாவுக்காக விளையாடிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அவர் ரன்களை வாரி வழங்கி சுமாராகவே செயல்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பி.சி.சி.ஐ – விவரம் இதோ

இதைத்தொடர்ந்து இந்த தொடரின் 2வது மற்றும் கடைசி போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்குகிறது. அதில் வென்று குறைந்தபட்சம் தொடரை சமன் செய்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. எனவே அந்த போட்டியில் விளையாடும் 11 பேர் அணியில் சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement