- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் கில்லா? ஜெய்ஸ்வாலா? ஸ்மித் உள்ளிட்ட 7 ஆஸி வீரர்கள் கருத்து

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. அந்தத் தொடரில் பேட்டிங் துறையில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோரில் அசத்தப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் ஏற்கனவே 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் சுப்மன் கில் ஆல் ஃபார்மட் பிளேயர் என்ற பாராட்டுகளை வாங்கியுள்ளார்.

அதனாலேயே அவரை வருங்கால கேப்டனாக வளர்ப்பதற்காக பிசிசிஐ தற்போது துணை கேப்டனாக அறிவித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 2021ஆம் ஆண்டு இந்தியா பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் சுப்மன் கில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றி தன்னுடைய திறமையை நிரூபித்தார். மறுபுறம் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய ஜெய்ஸ்வால் கடந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமானார்.

- Advertisement -

வருங்கால சூப்பர்ஸ்டார்:

அந்த வாய்ப்பில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான அறிமுக போட்டியிலேயே 171 ரன்கள் விளாசிய அவர் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்தார். மேலும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாக் அவுட் சுற்றில் சதமடித்த ஜெய்ஸ்வால் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினார். அதை விட கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்த அவர் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அத்தொடரில் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்ட ஜெய்ஸ்வால் தொடர்நாயகன் விருது வென்றது மறக்க முடியாது. இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் யார் என்று சில ஆஸ்திரேலிய வீரர்களிடம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைகாட்சியில் கேட்கப்பட்டது.

- Advertisement -

சூப்பர்ஸ்டார் ஜெய்ஸ்வால்:

அதற்கு ஸ்டீவ் ஸ்மித் “ஜெய்ஸ்வால் அடுத்த தலைமுறையின் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம்” என்று பதிலளித்தார். அதே போல “ஜெய்ஸ்வால் அடுத்த பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார் என்று நான் நினைக்கிறேன்” என நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் கூறினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் “3 வகையான கிரிக்கெட்டிலும் ஜெய்ஸ்வால் நல்ல வீரராக தெரிகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 79/3 டூ 105.. 126 ரன்ஸ்.. 4, 4, 4, 4, 4.. மாஸ் ஓப்பனிங் மட்டமான ஃபினிஷிங்.. பாபர் அசாம் அணிக்கு நேர்ந்த பரிதாபம்

மேலும் அலெக்ஸ் கேரி, நேதன் லயன் ஆகியோரும் “ஜெய்ஸ்வால்” என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்தனர். மறுபுறம் கேமரூன் கிரீன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சுப்மன் கில் அடுத்த சூப்பர்ஸ்டாராக வருவார் என்று தேர்வு செய்தனர். மொத்தத்தில் 5 பேர் ஜெய்ஸ்வாலையும் 2 பேர் கில்லையும் அடுத்த சூப்பர்ஸ்டார் இன்று தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -