79/3 டூ 105.. 126 ரன்ஸ்.. 4, 4, 4, 4, 4.. மாஸ் ஓப்பனிங் மட்டமான ஃபினிஷிங்.. பாபர் அசாம் அணிக்கு நேர்ந்த பரிதாபம்

Babar Azam
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தற்சமத்தில் சுமாரான ஃபார்மில் தடுமாறி வருகிறார். அவருடைய சுமாரான ஆட்டத்தால் சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக் குட்டிகளிடம் பாகிஸ்தான் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்தது. அதன் உச்சமாக வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோற்றது.

அதனால் பாபர் அசாம் தற்சமயத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடமே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அந்த சூழ்நிலையில் பாகிஸ்தானில் தற்போது 2024 சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பை உள்ளூர் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் செப்டம்பர் 15ஆம் தேதி பைசாபாத் நகரில் ஸ்டாலியன்ஸ் மற்றும் மார்க்கோர்ஸ் அணிகள் மோதின.

- Advertisement -

மாஸ் ஓப்பனிங்:

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மார்க்கோர்ஸ் அணி 232 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய ஸ்டாலியன்ஸ் அணி 13-1 என தடுமாறிக் கொண்டிருந்த போது பாபர் அசாம் களமிறங்கினார். அந்த வாய்ப்பில் முதல் 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் தடுமாற்றமாக விளையாடினார்.

ஆனால் சென்வாஸ் தஹானி வீசிய 8வது ஓவரின் முதல் பந்தை தவிர்த்து அடுத்த 5 பந்துகளில் 4, 4, 4, 4, 4 என பாபர் அசாம் அடுத்தடுத்த 5 பவுண்டரிகளை பறக்க விட்டார். அதனால் 79-3 என தம்முடைய அணிக்கு நல்ல துவக்கத்தை பெற்றுக் கொடுத்த அவர் தம்முடைய அணியை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் மீண்டும் வேலையைக் காட்டிய அவர் மெதுவாக விளையாடினார்.

- Advertisement -

மோசமான ஃபினிசிங்:

போதாக்குறைக்கு எதிர்ப்புறம் வந்த மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்து அவருக்கு கை கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். அதனால் மெதுவாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பாபர் அசாம் 45 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக அவுட்டானார். இறுதியில் 79-3 என நல்ல துவக்கத்தை பெற்றிருந்த ஸ்டாலியன்ஸ் அணி 105 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: மீண்டும் அணிக்கு திரும்புவது எப்போது? தனது தீர்க்கமான முடிவை அறிவித்த முகமது ஷமி – விவரம் இதோ

மறுபுறம் 126 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மார்கோர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜாஹித் மஹ்மூத், ஆஹா சல்மான் சேர்ந்து 8 விக்கெட்டுகளை எடுத்தனர். மொத்தத்தில் அப்போட்டியில் சிறந்த ஓப்பனிங் பெற்ற பாபர் அசாம் நன்றாக ஃபினிஷிங் செய்யாமல் உள்ளூர் கிரிக்கெட்டிலும் சொதப்பினார். அதனால் மீண்டும் அவர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

Advertisement