கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் சிம்ம ஸ்வப்னமாக இருந்து வந்தவர் ஆஸ்திரேலிய வேகா பந்து வீச்சாளர் பிரெட் லீ. பௌன்சர் வீசுவதிலும் ,பேட்ஸ் மேன் களை தனது அபாரமான பந்துவீச்சுகளிலும் திணறடிப்பதிலும் வல்லவர் பிரெட் லீ. கடந்த 2015 ஆண்டு அணைத்து கிரிக்கெட் பார்மேட்டிலும் ஒய்வு பெற்ற பிரெட் லீ தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
A ragged, old man turned up at a local park to play cricket with the kids – little did they realise it was none other than @BrettLee_58! Watch many such unique stories only on #SuperSunday, on Star Sports. pic.twitter.com/hVPrdfiVQJ
— Star Sports (@StarSportsIndia) April 27, 2018
தற்போது இந்தியாவில் நடந்து வரும் ஐபில் போட்டிகளில் வர்ணனையாளரக இருந்து வரும் பிரெட் லீ சமீபத்தில் ஒரு வயதான கிழவன் போல வேடமணிந்து சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். மேலும் முதலில் கிரிக்கெட் ஆடத்தெரியாதது பல சிறுவர்களை ஏமாற்றிய பிரெட் லீ பின்னர் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசதி சிறுவர்களை அசத்தினார் .
இதனால் ஒரு வயதானவர் எப்படி இந்த அளவிற்கு ஆட முடியும் என்று குழம்பிய பின்னர் தனது வேடத்தை கலைத்து குழந்தைகளுக்கு சுப்ரிஸ் அளித்தார். வந்துள்ளது பிரெட் லீ என்று அறிந்ததும் அந்த சிறுவர்களின் கண்களில் தெரிந்த சந்தோசம் விலைகொடுக்க முடியாதது. இதோ அந்த அற்புதமான தருணத்தின் வீடியோ பதிவு