இந்திய கிரிக்கெட் அணிக்காக 322 கோடியை செலவு செய்ய இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் – விவரம் இதோ

INDvsAUS
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்காக அடிலெய்டு ஓவல் மைதானத்தில் அருகில் 322 கோடி ரூபாய் அளவில் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வரும் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

paine 1

- Advertisement -

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நடுவே இந்த தொடர் நடத்தப்பட்டால் வீரர்களுக்கு கடும் பாதுகாப்பு, உடல்நலத்தை பராமரிக்க ஏற்பாடுகள் என பலவற்றை செய்யவேண்டியுள்ளது. ஒருவேளை இந்த தொடர் உறுதி செய்யப்பட்டு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று விட்டால், அவர்களின் பாதுகாப்பிற்காக அடிலெய்டு மைதானத்தின் அருகில் சுமார் 322 கோடி ரூபாய் அளவில் புதிய ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

இதில் இந்திய வீரர்களை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 132 அறைகள் இருக்கின்றன. இந்த மொத்த திட்டங்கள் அனைத்தும் சரியாக நடைபெற்றால் இந்த ஹோட்டலை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிகிறது. மேலும், இந்த ஹோட்டலில் அதிநவீன வசதிகள் உள்ளது.

உள்ளேயே கிரிக்கெட் மைதானம், வலைபயிற்சி என அனைத்தும் அங்கு இருப்பதாக தெரிகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் இவ்வாறு திட்டம் தீட்டி வந்தாலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எடுக்கும் முடிவில் தான் இந்த தொடர் நடக்குமா? இல்லையா? என்பது தெரியும்.

இந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ரத்து ஆகும் பட்சத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 2,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

Advertisement