- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னை விட பெரிய விராட் கோலி ரசிகரான.. அவர் ஆட்டோகிராப் வாங்க சொன்னாரு.. ஆஸி பிரதமர்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்தது. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா தங்களை குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலியாவுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது.

இதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. அடிலெய்ட் நகரில் நடைபெற உள்ள அந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடியது. அப்போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வெற்றியும் கண்டது.

- Advertisement -

ரசிகனாக பிரதமர்:

முன்னதாக அந்தப் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பென்சி இந்திய வீரர்களை சந்தித்தார். அப்போது அவர் மற்ற வீரர்களை காட்டிலும் விராட் கோலியிடம் அதிகமாக பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் விராட் கோலியின் ரசிகராக அவரை சந்தித்தது பற்றி அல்பென்சி அவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசினார்.

அப்போது தம்முடைய மருத்துவர் தம்மை விட விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர் என்று அவர் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய பர்சனல் டாக்டர் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர். அவருக்கு விராட் கோலியை எந்தளவுக்கு பிடிக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிப்பது கொஞ்சம் கடினம். அவரை சமீபத்தில் பார்த்த போது விராட் கோலியை நான் பார்க்கப் போகிறேன் என்று அவரிடம் சொன்னேன்”

- Advertisement -

கோலியிடம் ஆட்டோகிராப்:

“அப்போது விராட் கோலியிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று அவரிடம் சொன்னார்” எனக் கூறினார். அது போக டிம் வாட்ஸ் எனும் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறையின் துணை அமைச்சரும் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர் என்று சமீபத்தில் கூறியிருந்தார். அந்த வகையில் விராட் கோலிக்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

இதையும் படிங்க: சதத்தை அடித்தவர்களை விட அசத்திய அந்த பையன் இந்தியாவின் வருங்காலம்.. விமர்சித்த கவாஸ்கர் பாராட்டு

அப்படி ஆஸ்திரேலியாவில் இருக்கும் தம்முடைய ரசிகர்களுக்கும் சேர்த்து அவர் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பினார். அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவில் அதிக சர்வதேச சதங்கள் (10) அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். அதனாலேயே அவரை ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் இவ்வளவு விரும்புவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -