3வது டி20க்கு முன் நாடு திரும்பிய 6 வீரர்கள்.. இந்தியாவை சாய்க்க பெரிய தலையை இறக்கும் ஆஸி

AUS Steve Smith
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்குப் பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் சூரியகுமார் தலைமையில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

மறுபுறம் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவுக்கு நெஞ்சத்தை உடைக்கும் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு முதலிரண்டு போட்டிகளில் சந்தித்த தோல்விகள் ஒரு பொருட்டே அல்ல என்று சொல்லலாம். இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் முதல் படியாக நடைபெறும் இத்தொடரில் எஞ்சிய போட்டிகளில் வென்றால் தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற நிலைமைக்கு ஆஸ்திரேலியா வந்துள்ளது.

- Advertisement -

6 மாற்றங்கள்:
எனவே நவம்பர் 28ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெறும் 3வது போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியா தங்களுடைய அணியில் மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதில் உலகக்கோப்பை முழுவதும் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜாம்பா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஸ் இங்லிஷ் ஆகிய வீரர்களுக்கு பணிச்சுமை காரணமாக இத்தொடரின் கடைசி 3 போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் மேக்ஸ்வெல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சீன் அபௌட் 3வது போட்டிக்கு பின் நாடு திரும்ப உள்ளனர். இருப்பினும் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ள 6 வீரர்களுக்கு பதிலாக 4 மாற்று வீரர்களையும் மட்டுமே ஆஸ்திரேலியா வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி அதிரடி விக்கெட் கீப்பர் ஜோஸ் பிலிப் மற்றும் பென் மெக்டெர்மோட் ஆகியோர் கடைசி 3 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அவர்களுடன் பென் துவார்ஷுஸ் மற்றும் கிறிஸ் க்ரீன் ஆகியோர் ராய்ப்பூர் நகரில் நடைபெறும் 4வது டி20 போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியுடன் சேர்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகக்கோப்பையில் விளையாடிய அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் நாடு திரும்பியுள்ள நிலையில் டிராவிஸ் ஹெட் மட்டுமே இத்தொடரில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க: பாண்டியா வேணாம்.. 2024 டி20 உ.கோ இந்திய அணிக்கு அவர் தான் கேப்டனா இருக்கணும்.. ஜஹீர் கான் கோரிக்கை

குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் அபாரமாக விளையாடி 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற அவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே தற்போது வெற்றி பெற வேண்டிய நிலைமை வந்துள்ளதால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத அவர் இந்தியாவை தோற்கடிப்பதற்காக 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement